செய்திகள்

மதுரை மாவட்டத்தில் ஸ்மார்ட் கார்டுகள் பெற சிறப்பு முகாம்

Published On 2017-07-04 10:10 GMT   |   Update On 2017-07-04 10:10 GMT
மதுரை மாவட்டத்தில் ஸ்மார்ட் கார்டுகள் பெற 2 நாட்கள் சிறப்பு முகாம் நடக்கிறது.

மதுரை:

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் மூலம் ஏற்கனவே உள்ள பழைய குடும்ப அட்டைக்கு பதிலாக புதியதாக ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டத்தில் 6 கட்டங்களாக இதுவரை மொத்தம் 4 லட்சத்து 42 ஆயிரத்து 974 ஸ்மார்ட் கார்டுகள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது.

தற்போது வரை குடும்ப தலைவர் படம் பதிவேற்றம் செய்யப்படாதவர்கள், குடும்ப தலைவர் பிறந்த தேதி குறிப்பிடாதவர்கள், குடும்ப தலைவரின் தந்தை பெயர் அல்லது கணவர் பெயர் மற்றும் முகவரி தமிழில் இல்லாதவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு அச்சிடப்படாமல் உள்ளது.

எனவே மேற்கண்ட விபரங்களை அளித்து ஸ்மார்ட் கார்டுகள் பெற மதுரை மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடை பெற உள்ளது.

இந்த முகாமில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கார்டுகளில் உள்ள தவறுகளை திருத்தம் செய்து கொள்ளலாம்.

நாளை (5-ந் தேதி) மற்றும் மறுநாள் (6-ந் தேதி) முகாம் நடக்கிறது.

மதுரை மாவட்டத்தில் ஒத்தக்கடை, குலமங்கலம் மெயின்ரோடு, விரகனூர், மத்திய சரகத்தில் பள்ளிக்கூட சந்து, ஆரப்பாளையம், பாலரெங்கா புரம், மேலூர் டவுன் அல் அமீன் பள்ளி அருகில், முகமதியாபுரம், சோழவந்தான், திருமங்கலம், இ.புதுப்பட்டி நியாயவிலை கடை, பேரையூர் ஆகிய பகுதிகளில் முகாம்கள் நடைபெறும்.

மேற்கண்ட பகுதிகளை உள்ள ரேசன் கார்டுதாரர்கள் முகாமில் பயன்பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கண்ட செய்திக் குறிப்பை மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News