செய்திகள்

நாகர்கோவில் பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம்: நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

Published On 2017-06-21 14:28 GMT   |   Update On 2017-06-21 14:28 GMT
நாகர்கோவில் பகுதியில் உள்ள அனைத்து வீடு மற்றும் கழிவு நீர் தேங்கி உள்ள இடங்களில் கொசு மருந்து அடிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்:

குமரி மாவட்ட எல்கையையொட்டி உள்ள கேரளாவில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதையடுத்து குமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வரவாமல் தடுப்பதற்காக டெங்கு கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் நாகர்கோவில் நகராட்சி பகுதியில் டெங்கு கொசு பரவாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு நகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி சுகாதாரதுறை அதிகாரிகள் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தனர். வீடுகளில் உள்ள தொட்டியில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரை பார்வையிட்டனர். சுத்தமாக இல்லாத தண்ணீரை மாற்ற அறிவுரை கூறினர்.

மேலும் தேங்காய் சிரட்டை, டயர் போன்ற கழிவுப் பொருட்களில் தேங்கி உள்ள தண்ணீரை அப்புறப்படுத்தினார்கள். 26-வது வார்டு கிறிஸ்துநகர் பகுதியில் நகராட்சி ஊழியர்கள் கை தெளிப்பான் மூலம் டெங்கு கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அந்த பகுதியில் உள்ள அனைத்து வீடு மற்றும் கழிவு நீர் தேங்கி உள்ள இடங்களிலும் கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சுகாதாரத்துறை அதிகாரி பகவதிபெருமாள் மற்றும் ஊழியர்கள் பணிகளை மேற்கொண்டனர்.
Tags:    

Similar News