செய்திகள்

புதுவையில் பட்ஜெட் நகலை கிழித்து பாரதிய ஜனதா போராட்டம்

Published On 2017-05-26 08:18 GMT   |   Update On 2017-05-26 08:18 GMT
புதுவையில் பட்ஜெட் நகலை கிழித்து பாரதிய ஜனதா கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி;

புதுவை சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்றும், தமிழகத்தை போல் புதுவையிலும் வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்கு உதவித்தொகை எதுவும் வழங்குவதற்கான திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும், மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை திறக்கவும், புதிய தொழிற்சாலைகளை கொண்டுவரவும் பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் வெளியிடாததை கண்டித்து புதுவை மாநில பாரதிய ஜனதா சார்பில் இன்று புதுவை காந்தி வீதி அமுதசுரபி அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் தங்க.விக்ரமன், ரவிச் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் தலைவர்கள் கேசவலு, தாமோதர், மாநில துணை தலைவர்கள் செல்வம், சோமசுந்தரம், துரை. கணேசன், பிரான்சிஸ், மாவட்ட தலைவர்கள் மூர்த்தி, சிவானந்தம், மோகன் குமார், சக்திபாலன், அணி தலைவர்கள் வக்கீல் அசோக்பாபு, கோபி, மகேஷ்,

ரத்தினவேலு, விஜயசைலேந்தர், பாஸ்கர், துரை.சேனாதிபதி, சரவண குமார், சசிகுமார், ஆறுமுகம், விஜயலட்சுமி, அகிலன், உமாபதி, மோகன்கமல், சதாசிவம், மவுலி தேவன், புகழேந்தி, பத்மநாபன், சோழராஜன் மற்றும் சாய்.ஜெ.சரவணன்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பட்ஜெட் நகலை கிழித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

Tags:    

Similar News