செய்திகள்

அரசு மருத்துவமனையில் தொடர் மின் தடையால் நோயாளிகள் அவதி

Published On 2017-05-25 16:28 GMT   |   Update On 2017-05-25 16:28 GMT
சின்னமனூர் அரசு மருத்துவமனையில் தொடர் மின்தடையால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சின்னமனூர்:

சின்னமனூரில் அரசு மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவமனைக்கு சின்னமனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இது மாவட்டத்திலேயே 2-வது பெரிய மருத்துவமனையாக விளங்குகிறது.

இந்நிலையில் மருத்துவமனை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனையில் இரவு நேரங்களில் தொடர் மின்தடை ஏற்படுகிறது. இதனால் உள்நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் இதர நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்களிடம் கேட்டபோது, அடிக்கடி மின்சார வினியோகம் தடைபடுவதால் இரவு நேரங்களில் கர்ப்பிணிகள், குழந்தைகள் தூங்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

மருத்துவமனையில் உள்ள ஜெனரேட்டர் வசதி இருந்தும் அதனை நிர்வாகம் பயன்படுத்தாமல் உள்ளது. எனவே மருத்துவமனையில் மின்தடை ஏற்படும் போது ஜெனரேட்டரை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News