செய்திகள்

குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

Published On 2017-04-29 17:38 GMT   |   Update On 2017-04-29 17:38 GMT
சிறுகன்பூரில் குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.
பாடாலூர்:

ஆலத்தூர் தாலுகா சிறுகன்பூர் கிராமத்தில் 1500–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு கடந்த 10 நாள்களாக குடிநீர் சரியாக வினியோகிக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இது தொடர்பாக கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இதனால் ஆத்திரம் அடைந்த சிறுகன்பூர் கிராம மக்கள் சிறுவாச்சூர் – அரியலூர் செல்லும் சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 தகவலறிந்த ஆலத்தூர் தாசில்தார் சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலவலர்கள் இளங்கோவன், மணிவாசகம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேசசுவார்த்தை நடத்தினர்.

அப்போது குடிநீர் வினியோகம் செய்ய உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்துச் சென்றனர். இதனால் அந்த சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News