search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம மக்கள் சாலை மறியல்"

    • மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் பொது நிலத்தில் தனி நபர் குடிசை அமைத்துள்ளார்.
    • ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை அந்த பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள வீரப்பன்நாயக்கன்பட்டி கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்திற்கு சொந்தமான மாரியம்மன் கோவில் உள்ளது. மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் பொது நிலத்தில் தனி நபர் குடிசை அமைத்துள்ளார்.

    இந்த குடிசை அமைத்தது குறித்து அரசு அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை அந்த பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த சாலை மறியல் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    • குழிநாவல் - சுண்ணாம்புக்களும் செல்லும் சாலையில் குழிநாவல் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடங்களுடன் அண்ணாமலைச்சேரி - சென்னை செல்லும் அரசு பேருந்தை மடக்கி சாலை மறியல் ஈடுபட்டனர்.
    • ஆரம்பாக்கம் போலீசார் மற்றும் வட்டாட்சியர் கண்ணன் அலுவலர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த ஓபசமுத்திரம் கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சி சார்பாக இங்கு உள்ள கிராமப்புற மக்கள் குழிநாவல், ஓபசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு ஆகிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் ஓபசமுத்திரம் ஊராட்சி குழிநாவல் பகுதியில் நீண்ட நாட்களாக குடிநீர் தெரு விளக்கு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை ஊராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை என தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு கிராமத்தின் சார்பாக புகார்கள் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இன்று குழிநாவல் - சுண்ணாம்புக்களும் செல்லும் சாலையில் குழிநாவல் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடங்களுடன் அண்ணாமலைச்சேரி - சென்னை செல்லும் அரசு பேருந்தை மடக்கி சாலை மறியல் ஈடுபட்டனர்.

    இதை அறிந்த ஆரம்பாக்கம் போலீசார் மற்றும் வட்டாட்சியர் கண்ணன் அலுவலர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தையில் எங்கள் பகுதிக்கு குடிநீர் சரிவர வருவதில்லை, தெரு விளக்கு போடுவதில்லை என குற்றம் சாட்டினர். இது சம்பந்தமாக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் வட்டாட்சியர் அனைத்து துறை அலுவலர்களுக்கும் தகவல் தெரிவித்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

    ×