search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water issue"

    ஆழ்வார்குறிச்சி அருகே பெண் கொலையில் அவரது உறவினரை போலீசார் கைது செய்தனர்.
    கடையம்:

    நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள செட்டிகுளம் புதுகிராமம் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் மனைவி கல்யாணி (வயது 44). இவருக்கும், அக்காள் ஈஸ்வரி, அவருடைய மகள் இசக்கியம்மாள் ஆகியோருக்கும் இடையே குழாயில் தண்ணீர் பிடிப்பதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் இதே பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கல்யாணி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

    இதுதொடர்பாக ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இசக்கியம்மாளின் கணவர் கருப்பசாமியை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பொட்டல்புதூரில் பதுங்கி இருந்த கருப்பசாமியை போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக என்னுடைய மாமியார், மனைவியிடம் கல்யாணி அடிக்கடி தகராறு செய்து வந்தார். மீண்டும் ஏற்பட்ட தகராறில் எனது மனைவி இசக்கியம்மாளை அவதூறாக பேசினார். இதுகுறித்து நான் கல்யாணியிடம் தட்டிக்கேட்டேன். இதனால் எங்களுக்குள் ஏற்பட்ட தகராறில் நான் கல்யாணியை அரிவாளால் வெட்டினேன். இதில் அவர் இறந்து விட்டார். நான் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டேன். போலீசார் என்னை தேடிப்பிடித்து கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    கிணத்துக்கடவு அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

    கிணத்துக்கடவு:

    கிணத்துக்கடவு அருகே உள்ள தேவராயபுரம் ஊராட்சி சென்றாம் பாளையம் கிராமத்தில் கடந்த 18 நாட்களாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்று காலை 7.30 மணியளவில் சென்றாம் பாளையம் பஸ் நிறுத்தத்தில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

    இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அந்த வழியாக பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு செல்லும் அரசு பஸ் வந்தது. அதனை பொதுமக்கள் சிறை பிடித்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் தாஸ், அம்பராம் பாளையம் கூட்டு குடிநீர் திட்ட உதவி பொறியாளர் திருமலை சாமி, கிணத்துக்கடவு சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் விரைந்து வந்தனர்.

    அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தான் தண்ணீர் சப்ளை செய்ய முடியவில்லை.

    இன்று முதல் முறையாக தண்ணீர் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி இன்று தண்ணீர் வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    குடிநீர் பிரச்சினை தீர்க்க கோரி பண்ருட்டி அருகே கிராம மக்கள் இன்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் அங்கு செட்டிபாளையம் கிராமத்தில் உள்ள புது காலணியில் சுமார் 150 குடும்பங்கள் உள்ளன. இங்கு குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு பழுதடைந்ததால் கடந்த பல நாட்களாக இங்கு குடிநீர் பிரச்சனை இருந்து வருகிறது.

    இந்த பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தினமும் குடிநீருக்காக பல கிலோமீட்டர் நடந்து சென்றுதண்ணீர் எடுத்து வரும் அவல நிலை இருந்து வந்தது

    இதுபற்றி பலமுறை அதிகாரிகளிடம் எடுத்துக்கூறியும் குடிநீர் பிரச்சினையை தீர்க்கப்படாததால் அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஏராளமானோர் திரளாகக் கூடி பண்ருட்டி சித்தூர் காலையில் அங்கு செட்டிபாளையத்தில் இன்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பஸ் போக்குவரத்து பாதித்தது இந்த வழியாக பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக குடிநீர் பிரச்சனை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் இங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×