என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாரியம்மன் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு:   கிராம மக்கள் சாலை மறியல்
    X

     சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

    மாரியம்மன் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு: கிராம மக்கள் சாலை மறியல்

    • மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் பொது நிலத்தில் தனி நபர் குடிசை அமைத்துள்ளார்.
    • ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை அந்த பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள வீரப்பன்நாயக்கன்பட்டி கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்திற்கு சொந்தமான மாரியம்மன் கோவில் உள்ளது. மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் பொது நிலத்தில் தனி நபர் குடிசை அமைத்துள்ளார்.

    இந்த குடிசை அமைத்தது குறித்து அரசு அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை அந்த பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த சாலை மறியல் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×