செய்திகள்
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு

தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் என்னென்ன? தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

Published On 2021-04-05 08:09 GMT   |   Update On 2021-04-05 08:25 GMT
வாக்குச்சாவடிகளில் காய்ச்சல் பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறினார்.
சென்னை:

சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* தமிழகத்தில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

* வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு கவச உடை வழங்கப்படும்.

* வாக்குச்சாவடிகளில் காய்ச்சல் பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் 50% வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.

* வாக்குச்சாவடிகளில் எத்தனை பேர் வரிசையில் இருக்கின்றனர் என்பதை தேர்தல் ஆணைய இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.



* 21 லட்சம் புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன.

* பூத் சிலிப் இல்லையென்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் உரிய ஆவணத்துடன் வாக்களிக்கலாம்.

* கொரோனா பாதித்தவர்கள் பாதுகாப்பு கவச உடையுடன் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க பிபிஇ கிட் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* வாக்குப்பதிவு தொடர்பான தகவல்களை பெற 1950 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

* தமிழகத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை ரூ.428 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News