செய்திகள்

தமிழர் நலனை கருத்தில் கொண்டு ஆட்சியில் இல்லா விட்டாலும் இந்திக்கு எதிராக தி.மு.க. போராடும்: ஆ.ராசா

Published On 2017-05-22 05:05 GMT   |   Update On 2017-05-22 05:05 GMT
தமிழர் நலனை கருத்தில் கொண்டு ஆட்சியில் இல்லா விட்டாலும் இந்திக்கு எதிராக தி.மு.க. போராடும் என்று மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா கூறியுள்ளார்.

கடையநல்லூர்:

இந்தி திணிப்பை எதிர்த்தும், நீட் தேர்வில் தமிழகத்திற்கு விதி விலக்கு அளிக்க கோரியும் கடையநல்லூர் ஒன்றியம் இடைகால் கிராமத்தில் ஒன்றிய தி.மு.க. சார்பில் கண்டன பொதுக் கூட்டம் நடந்தது.

இதில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

1964-ம் ஆண்டு தி.மு.க. எப்படி இந்தி திணிப்பிற்கு போராடியதோ, அதே போல கொஞ்சமும் தளராமல் தமிழக மக்களுக்கு எதிராக அடுத்த தலைமுறையின் நலன் கருதி சிந்தித்து மக்கள் பணியாற்றும் இயக்கம் தான் தி.மு.க.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் இல்லா விட்டாலும் மக்களுக்காக அல்லும் பகலும் தொடர்ந்து போராடி வருகிறது. இந்தியை கட்டாயமாக்க மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தீவிர முனைப்புக்காட்டி வருகிறது. அதற்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு கருத்தரங்குகளையும், விளக்க பொதுக்கூட்டங்களையும் தி.மு.க. நடத்தி வருகிறது. இது போல தான் நீட் தேர்வையும் தி.மு.க. எதிர்த்து வருகிறது. தமிழர் நலனுக்காக தி.மு.க. என்றும் அரணாக நின்று போராடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News