என் மலர்
சத்தீஸ்கர்
- இந்தப் பைலாடிலா வனப்பகுதி மிக உயர்தரமான இரும்புத் தாது மற்றும் பழமையான மரங்களைக் கொண்ட அடர்ந்த காடாகும்.
- மூத்த சுற்றுச்சூழல் ஆய்வாளர் மாதவ் காட்கில் மறைந்த அதே நேரத்தில், காடுகளை அழிக்கும் இத்தகைய திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
சத்தீஸ்கர் மாநிலத்தின் பைலாடிலா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், அரசுக்குச் சொந்தமான NMDC நிறுவனம் இரும்புத் தாது சுரங்கப் பணிகளை விரிவுபடுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
சுமார் 874.924 ஹெக்டேர் பரப்பளவிலான வனப்பகுதியில் இரும்புத் தாது தோண்டி எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இரும்புத் தாது உற்பத்தியை ஆண்டுக்கு 11.30 மில்லியன் டன்னில் இருந்து 14.50 மில்லியன் டன்னாக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பைலாடிலா வனப்பகுதி மிக உயர்தரமான இரும்புத் தாது மற்றும் பழமையான மரங்களைக் கொண்ட அடர்ந்த காடாகும்.
இந்த விரிவாக்க நடவடிக்கையால் இப்பகுதியின் பல்லுயிர் பெருக்கம் மற்றும் நீர் ஆதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்தச் சுரங்க விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தார்வாடா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காடுகளை அழித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு லாபம் வழங்கும் இந்த நடவடிக்கையை அவர்கள் கடுமையாகச் சாடியுள்ளனர்.
மகாராஷ்டிராவை சேர்ந்த மூத்த சுற்றுச்சூழல் ஆய்வாளர் மாதவ் காட்கில் மறைந்த அதே நேரத்தில், காடுகளை அழிக்கும் இத்தகைய திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது முரணாக பார்க்கப்படுகிறது.
- வங்கதேச ஊடுருவல்காரர்கள் என அழைத்து, 8 தொழிலாளர்களையும் சூழ்ந்துகொண்டு லத்திகளால் கடுமையாகத் தாக்கினர்.
- இதில் ஒரு தொழிலாளியின் கை எலும்பு முறிந்ததுடன், மற்றவர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில், மேற்கு வங்க தொழிலாளர்கள் 8 பேர் மீது பஜ்ரங் தளம் அமைப்பினர் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தைச் சேர்ந்த 8 இஸ்லாமியத் தொழிலாளர்கள், ராய்ப்பூரில் உள்ள ஒரு பேக்கரியில் பணியாற்றி வந்தனர்.
நீண்ட நாட்களாகத் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய கூலி நிலுவைத் தொகையை அவர்கள் கேட்டபோது, பேக்கரி நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், அங்கு வந்த பஜ்ரங் தளம் அமைப்பினர் வந்து, அவர்களை வங்கதேச ஊடுருவல்காரர்கள் என அழைத்து, 8 தொழிலாளர்களையும் சூழ்ந்துகொண்டு லத்திகளால் கடுமையாகத் தாக்கினர்.
இதில் ஒரு தொழிலாளியின் கை எலும்பு முறிந்ததுடன், மற்றவர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்தத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாகப் பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தொடர் வன்முறை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
- வயல்வெளியில் சிறுமி சடலமாகக் கிடப்பதை கிராம மக்கள் கண்டனர்.
- அவர் சிறுமியின் குடும்பத்திற்கு நன்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சத்தீஸ்கரில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கோடரியால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் சோன்பூர் காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி, கடந்த டிசம்பர் 31-ம் தேதி முதல் காணாமல் போயிருந்தார்.
சிறுமியைத் தேடி வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று அருகிலுள்ள கோஸ்ரா கிராமத்தில் உள்ள ஒரு வயல்வெளியில் சிறுமி சடலமாகக் கிடப்பதை கிராம மக்கள் கண்டனர்.
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதும், பின்னர் ஆதாரங்களை மறைக்க கோடரியால் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாகச் 24 வயது இளைஞரை போலிசார் கைது செய்துள்ளனர். அவர் சிறுமியின் குடும்பத்திற்கு நன்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.
- என்கவுண்டர் நடந்த இடத்தில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் நக்சலைட்டுகள் அச்சுறுத்தலாக இருந்து வந்தனர். அவர்களை ஒழிக்கும் பணிகளில் மத்திய அரசு தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது.
இந்தநிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று நடந்த இரண்டு என்கவுண்டர் சம்பவத்தில் 14 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சுக்மா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் இன்று அதிகளவில் அந்த பகுதிக்கு விரைந்தனர். அவர்களை பார்த்ததும் மறைந்து இருந்த நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுட்டனர்.
பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய அதிரடியான தாக்குதலில் 12 நக்சலைட்டுகள் குண்டு பாய்ந்து பலியானார்கள்.தொடர்ந்து அந்த பகுதியில் நக்சலைட்டுகள் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோல பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியிலும் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இந்த ரகசிய தகவல் அடிப்படையில் பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு சென்று அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். இதில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த இரண்டு என்கவுண்டர் சம்பவத்தில் இருந்து 14 நக்சலைட்டுகள் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
என்கவுண்டர் நடந்த இடத்தில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சுக்மாவில் நடந்த அதிரடி தாக்குதல் மூலம் கோண்டா பகுதி நக்சலைட்டுகள் குழு கிட்டத்தட்ட முழுமையாக அழிக்கப்பட்டதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சத்தீஸ்கரில் கடந்த ஆண்டில் 285 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
- ராய்ப்பூரில் உள்ள மேக்னெட்டோ மாலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடந்தன.
ராய்ப்பூர்:
இயேசு கிறிஸ்து பிறந்த தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாகக் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் உள்ள மேக்னெட்டோ மாலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அலங்காரங்கள் செய்யப்பட்டன.
அப்போது, மாலுக்குள் புகுந்த கும்பல் ஒன்று கிறிஸ்துமஸ் அலங்காரங்களை சேதப்படுத்தி அராஜகத்தில் ஈடுபட்டது.
மாலில் வேலை பார்க்கும் ஊழியர்களையும் அந்த கும்பல் மிரட்டியது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.
- இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
- ராய்பூரில் உள்ள மேக்னெட்டோ மாலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.
இயேசு கிறிஸ்து பிறந்த தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்பூரில் உள்ள மேக்னெட்டோ மாலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், மாலுக்குள் புகுந்த கும்பல் ஒன்று கிறிஸ்துமஸ் அலங்காரங்களை சேதப்படுத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மாலில் வேலைபார்க்கும் ஊழியர்களையும் அந்த கும்பல் மிரட்டியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு ஒடிசாவில் தெருவோரத்தில் கிறிஸ்தவப் பொருட்களை விற்பனை செய்து வந்த மக்களை மிரட்டிய மதவாத கும்பல், உடனடியாக அவர்களை காலி செய்ய சொன்ன வீடியோ இணையத்தில் வைரலானது.இந்த வீடியோவில், :இது இந்து ராஷ்டிரம்.. இங்க கிறிஸ்தவப் பொருட்களை விற்கக் கூடாது.." என்று அந்த கும்பல் மிரட்டியது குறிப்பிடத்தக்கது.
- பல மருத்துவமனைகளில் காட்டப்பட்டும் எந்த பலனும் இல்லை என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.
- இந்த நோயால் உலகளவில் ஒரு சிலர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ராஜேஸ்வரி (வயது 12) கடந்த சில ஆண்டுகளாக அரிய தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல் படிப்படியாக கல் போன்று மாறி வருகிறது. இவருக்கு 4 வயதாக இருந்தபோது இந்த நோயின் அறிகுறிகள் தோன்றின. முதலில் உடலில் செதில்கள் உருவாகின. பின்னர் அது படிப்படியாக மரப்பட்டை போல கடினமாகி பின்னர் கல் போல கடினமாக மாறியது. இந்தப் பிரச்சனை முதலில் கைகளுக்குப் பரவியது.
பின்னர் முழு உடலுக்கும் பரவியது. இந்த நோயின் காரணமாக சிறுமியால் யாரையும் சந்திக்க முடியவில்லை. அவள் நாளுக்கு நாள் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகிறாள்.
பல மருத்துவமனைகளில் காட்டப்பட்டும் எந்த பலனும் இல்லை என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். ராஜேஸ்வரிக்கு இக்தியோசிஸ் ஹிஸ்ட்ரிக்ஸ் என்ற மரபணு தோல் நோய் இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது அரிதானது. இந்த நோயால் உலகளவில் ஒரு சிலர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொற்று அல்ல தற்போது நிரந்தர சிகிச்சை எதுவும் இல்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் மாய்ஸ்சரைசர் தடவுவது நோயின் விளைவுகளை ஓரளவு குறைக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
- நள்ளிரவில் அரவிந்த் கௌதம் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
- உயிரிழந்த வீரர் மற்றும் கொலையாளி ஆகிய இருவருமே உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்
சத்தீஸ்கர் மாநிலத்தில் நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த சக வீரரை, ஆயுதப்படை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் கைராகர் மாவட்டத்தில் உள்ள காக்ரா அடிப்படை முகாமில் சத்தீஸ்கர் ஆயுதப்படையின் (CAF) 17-வது பட்டாலியன் பிரிவு நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த முகாமில் காவலராகப் பணியாற்றி வந்த அரவிந்த் கௌதம் என்பவருக்கும், மெஸ் கமாண்டராக இருந்த சோன்பீர் ஜாட் என்பவருக்கும் இடையே நேற்று இரவு திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தனிப்பட்ட விவகாரம் தொடர்பாகத் தொடங்கிய இந்த மோதல், இருவருக்கும் இடையே முற்றிய நிலையில் கடும் மோதலாக மாறியது.
இதனைத் தொடர்ந்து, நள்ளிரவில் அரவிந்த் கௌதம் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில், முகாமின் பாரக் பகுதியில் தூங்கிக்கொண்டிருந்த சோன்பீர் ஜாட்டை, அரவிந்த் கௌதம் தனது துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சோன்பீர் ஜாட் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சத்தம் கேட்டு ஓடி வந்த மற்ற வீரர்கள், சோன்பீர் ஜாட் உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்துத் தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த வீரரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட அரவிந்த் கௌதமை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த வீரர் மற்றும் கொலையாளி ஆகிய இருவருமே உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- கொசுவை பரிசோதிக்குமாறு அதிகாரிகளிடம் அந்த இளைஞர் வலியுறுத்தி போராட்டம் நடத்தியுள்ளார்.
- இதனையடுத்து அந்த இளைஞர் நிம்மதி பெருமூச்சு விட்டார்.
சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூரில் தன்னை கடித்த கொசுவை பாலித்தீன் பையில் பிடித்து மாநகராட்சி அலுவலகத்திற்கு எடுத்து வந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
இளைஞர் ஒருவர் தன்னை கடித்த கொசு டெங்கு கொசுவாக இருக்குமோ என்ற அச்சத்தில் அதனை பிடித்து பாலித்தீன் பையில் அடைத்து மாநகராட்சி அலுவலகத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
இந்த கொசுவை பரிசோதிக்குமாறு அதிகாரிகளிடம் அந்த இளைஞர் வலியுறுத்தி போராட்டம் நடத்தியுள்ளார். இதையடுத்து மருத்துவர்கள் அந்த கொசுவைப் பரிசோதித்ததில், அது சாதாரண கொசு என்பது உறுதியானது. இதனையடுத்து அந்த இளைஞர் நிம்மதி பெருமூச்சு விட்டார்.
இந்தச் சம்பவத்தை சுட்டிக்காட்டி, "மாநகராட்சி நிர்வாகம் கொசுக்களைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது" என எதிர்க்கட்சித் தலைவர் ஆகாஷ் திவாரி விமர்சனம் செய்துள்ளார்.
- நக்சலைட்டுகளை தேடும் வேட்டை நடைபெற்று வருகிறது.
- சத்தீஸ்கரில் இந்த ஆண்டு இதுவரை 284 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் கோலப்பள்ளி போலீஸ் நிலையத்துக்குட்பட்ட வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக மாவட்ட ரிசர்வ் படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து இன்று காலை பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதிக்கு சென்றனர். அவர்களை பார்த்ததும் நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் பெண் உள்பட 3 நக்சலைட்டுகள் குண்டு பாய்ந்து பலியானார்கள். 3 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக சுக்மா மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு கிரண் சவால் தெரிவித்தார். அந்த பகுதியில் தொடர்ந்து நக்சலைட்டுகளை தேடும் வேட்டை நடைபெற்று வருகிறது.
சத்தீஸ்கரில் இந்த ஆண்டு இதுவரை 284 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் சுக்மா, பிஜப்பூர், தாண்டிவாடா உள்பட 7 மாவட்டங்களில் 255 பேர் கொல்லப்பட்டனர். 27 பேர் கரிதாபாத் மாவட்டத்திலும், சவுக்கி மாவட்டத்தில் 2 நக்சலைட்டுகளும் கொல்லப்பட்டனர்.
- தந்தேவாடாவுக்கு அருகிலுள்ள ககல்லூர் வனப்பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
- துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றொரு வீரருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் நேற்று (புதன்கிழமை) அன்று பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் 12 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
தந்தேவாடாவுக்கு அருகிலுள்ள ககல்லூர் வனப்பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியதால் பாதுகாப்பு படையினரும் பதிலுக்கு துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர்.
இந்தச் சண்டையில், மாவட்ட ரிசர்வ் கார்டை சேர்ந்த மூன்று வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றொரு வீரருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு தேடுதல் வேட்டை தொடர்ந்து வருகிறது. உயிரிழந்த மாவோயிஸ்டுகளின் உடல்கள் கைப்பற்றபட்டன.
- அவர்களில் 27 பேருக்கு மொத்தம் ரூ. 65 லட்சம் வெகுமதி அளிக்கப்பட்டது.
- தண்டேவாடா மாவட்டத்தில் தலை க்கு விலை வைக்கப்பட்ட 165 மாவோயிஸ்டுகள் உட்பட மொத்தம் 508 பேர் சரணடைந்துள்ளனர்.
சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் தண்டேவாடா மாவட்டத்தில் 37 மாவோயிஸ்டுகள் இன்று சரணடைந்தனர். அவர்களில் 12 பேர் பெண்கள் ஆவர்.
தண்டேவாடாவில் உள்ள டிஆர்ஜி அலுவலகத்தில் மூத்த காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் அதிகாரிகள் முன்னிலையில் அவர்கள் சரணடைந்தனர்.
அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்களில் 27 பேருக்கு மொத்தம் ரூ. 65 லட்சம் வெகுமதி அளிக்கப்பட்டது.
கடந்த 20 மாதங்களில் தண்டேவாடா மாவட்டத்தில் தலை க்கு விலை வைக்கப்பட்ட 165 மாவோயிஸ்டுகள் உட்பட மொத்தம் 508 பேர் சரணடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசின் மறுவாழ்வு திட்டத்தின்படி, சரணடைபவர்களுக்கு ரூ. 50,000 நிதி உதவியும், திறன் மேம்பாடு மற்றும் விவசாய நிலத்தில் பயிற்சி போன்ற சலுகைகளும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.






