என் மலர்
நீங்கள் தேடியது "அரிய நோய்"
- பல மருத்துவமனைகளில் காட்டப்பட்டும் எந்த பலனும் இல்லை என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.
- இந்த நோயால் உலகளவில் ஒரு சிலர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ராஜேஸ்வரி (வயது 12) கடந்த சில ஆண்டுகளாக அரிய தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல் படிப்படியாக கல் போன்று மாறி வருகிறது. இவருக்கு 4 வயதாக இருந்தபோது இந்த நோயின் அறிகுறிகள் தோன்றின. முதலில் உடலில் செதில்கள் உருவாகின. பின்னர் அது படிப்படியாக மரப்பட்டை போல கடினமாகி பின்னர் கல் போல கடினமாக மாறியது. இந்தப் பிரச்சனை முதலில் கைகளுக்குப் பரவியது.
பின்னர் முழு உடலுக்கும் பரவியது. இந்த நோயின் காரணமாக சிறுமியால் யாரையும் சந்திக்க முடியவில்லை. அவள் நாளுக்கு நாள் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகிறாள்.
பல மருத்துவமனைகளில் காட்டப்பட்டும் எந்த பலனும் இல்லை என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். ராஜேஸ்வரிக்கு இக்தியோசிஸ் ஹிஸ்ட்ரிக்ஸ் என்ற மரபணு தோல் நோய் இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது அரிதானது. இந்த நோயால் உலகளவில் ஒரு சிலர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொற்று அல்ல தற்போது நிரந்தர சிகிச்சை எதுவும் இல்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் மாய்ஸ்சரைசர் தடவுவது நோயின் விளைவுகளை ஓரளவு குறைக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
திண்டுக்கல்:
சித்த மருத்துவர்களுக்கு தலைவராக விளங்கும் அகஸ்தியர் பிறந்ததினம் சித்தமருத்துவ தினவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை சார்பில் தேசிய சித்தமருத்துவ தினவிழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு சித்தமருத்துவ அலுவலர் டாக்டர் விஜயா வரவேற்புரையாற்றினார். மாவட்ட கலெக்டர் வினய் தலைமை வகித்தார். விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
உலகில் நம்முன்னோர்கள் சித்தமருத்துவத்தில் பல நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்து உள்ளனர். தற்போது கூட டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட பல்வேறு காய்ச்சலுக்கு சித்தமருத்துவ முறையே சிறந்ததாக உள்ளது. இதுபோல பல அரியநோய்களுக்கு சித்த மருத்துவத்தில் மட்டுமே மருந்து உள்ளது.
வீடுகளில் பிரசவம் பார்த்த சமயங்களில் தாயும், சேயும் நலமாக காப்பாற்றப்பட்டனர். எனவே சித்தமருத்துவத்தை நாம் ஒவ்வொருவரும் போற்றி மதிக்கவேண்டும். தமிழகஅரசு சித்தமருத்துவத்திற்காக அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. குழந்தைகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க சென்னையில் தனியாக ஆஸ்பத்திரி அமைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் 24 மணிநேரமும் செயல்படும் 6 ரத்த சுத்திகரிப்பு மையங்கள், பழனியில் ஒரு மையம் செயல்பட்டு வருகிறது. இந்திய அளவில் தமிழக சுகாதாரத்துறை சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. அதனால்தான் பல பகுதிகளில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக தமிழகத்திற்கு வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் முன்னாள் மேயர் மருதராஜ், நலப்பணிகள் இணைஇயக்குனர் டாக்டர் மாலதிபிரகாஷ், மாநகராட்சி ஆணையாளர் மனோகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு மூலிகை கண்காட்சியை அமைச்சர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். #ministersrinivasan






