லைஃப்ஸ்டைல்

சப்பாத்திக்கு அருமையான இஞ்சி பெப்பர் சிக்கன்

Published On 2017-09-20 09:48 GMT   |   Update On 2017-09-20 09:48 GMT
இஞ்சி பெப்பர் சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள் :

சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சி பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 2 இன்ச்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
வினிகர் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.



செய்முறை :

கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிகொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, சோம்பு சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு அதில் இஞ்சி பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, சிக்கனைப் போட்டு, உப்பு சிறிது தூசி பிரட்டி 20 நிமிடம் மூடி வைத்து குறைவான தீயில் வேக வைக்க வேண்டும். சிக்கனில் தண்ணீர் இருக்கும். அதனால் தண்ணீர் சேர்க்க தேவையில்லை.

பிறகு மூடியைத் திறந்து, சிக்கனை பிரட்டி, அத்துடன் சோயா சாஸ் மற்றும் வினிகர் சேர்த்து நன்கு கிளறி, தீயை அதிகரித்து, தண்ணீர் முற்றிலும் வற்றியதும், மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி பிரட்டி இறக்கினால், இஞ்சி பெப்பர் சிக்கன் ரெடி!!!

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News