லைஃப்ஸ்டைல்

மாரடைப்பைத் தடுக்கும் புடலங்காய்

Published On 2018-02-10 03:02 GMT   |   Update On 2018-02-10 03:02 GMT
இதயம் பலவீனமானவர்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மாரடைப்பைத் தடுக்கவும் புடலங்காய் உதவுகிறது.
புடலங்காயை இளசாக இருக்கும் போதே பயன்படுத்துவது நல்லது. முதிர்ந்த புடலங்காய் சற்று கசப்பாக இருப்பதோடு, செரிமானம் ஆவதில் சிரமம் ஏற்படும். மேலும் புடலங்காயை கறியாக சமைத்து உண்ணும் போது அதன் விதைகளை நீக்கி விட்டு பயன்படுத்த வேண்டும். விதைகள் வயிற்றுக்குத் துன்பம் தருவதாக இருக்கும். முற்றிய புடலங்காயும், அதன் விதைகளும் வயிற்றுப் போக்கை உண்டாக்கிவிடும்.

100 கிராம் புடலங்காயில் 94 சதவிகிதம் உணவாகும். 92.9 கிராம் நீர்ச்சத்து உடையது. புரதம் 0.5 கிராமும், கொழுப்புச்சத்து 0.3 கிராமும், போலேட் 15 மைக்ரோ கிராமும், சிறிது வைட்டமின் சி சத்தும் அடங்கியுள்ளன. புடலங்காய் சர்க்கரை நோயாளிகளுக்கான மிகச்சிறந்த மருந்தாக அமையும். வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்றவும் மாரடைப்பைத் தடுக்கவும் புடலங்காய் உதவுகிறது. கருத்தடைக்கு மருந்தாகவும், பால்வினை நோய்களை தடுக்கும் சக்தியும் புடலங்காய்க்கு உள்ளது. புடலங்காயில் ஆல்கலாய்ட்ஸ், கிளைகோஸைட்ஸ், டேனின்ஸ் ப்ளேவனாய்ட்ஸ், பெனால்ஸ், ஸ்டிரால்ஸ் ஆகிய மருத்துவ பொருட்கள் மிகுந்துள்ளன.

விட்டு விட்டு காய்ச்சல் தொடரும் போது அடிக்கடி புடலங்காயை இளசாக வாங்கி விதைகளை நீக்கிவிட்டு, கறியாக சமைத்து சாப்பிடுவதால் காய்ச்சல் மறைந்து போகும். புடலங்காய் இதயத்துக்கு பலமும் நல்ல செயல்பாட்டையும் தரக்கூடியது.

இதயம் பலவீனமானவர்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதோடு அன்றாடம் காலையில் எழுந்து புடலைக்கொடியின் இளந்தளிர் இலைகளைப் பறித்து சுத்தம் செய்து சாறாகப் பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு வேளைக்கு இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை என இரண்டு வேளை சாப்பிடுவதால் இதயம் பலம்பெறும். இதய நோயாளிகள் 48 நாட்கள் தொடர்ந்து புடலங்காய் ஜூஸ் குடித்து வந்தால் உடல் நலம் பெறமுடியும்.
Tags:    

Similar News