search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Snake Gourd"

    • புடலங்காய் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மகசூல் அதிகரித்துள்ளதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • வரும் காலங்களில் விலை சற்று உயரும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் பூக்கள் சாகுபடி மற்றும் பல்வேறு விவசாயம் நடந்து வருகிறது. கடந்த சில தினங்களாக நிலக்கோட்டை பகுதியில் மழை பெய்து வந்தாலும் இன்னும் விவசாயப் பணிகளை தீவிரமாக தொடங்கவில்லை. இருப்பினும் கடந்த 2 மாதத்திற்கு முன்பு என்.ஊத்துப்பட்டி, தம்பிநாயக்கன்பட்டி, கோட்டூர் , மைக்கேல் பாளையம், சங்கால்பட்டி, பிள்ளையார் நத்தம், சிலுக்குவார் பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் புடலங்காய் சாகுபடி செய்தனர்.

    தற்போது புடலங்காய் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மகசூல் அதிகரித்துள்ளதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயி தெரிவிக்கையில்,

    புடலங்காய் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. இதன் காரணமாக விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவியாக இந்த புடலங்காய் சாகுபடி உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர். வரும் காலங்களில் விலை சற்று உயரும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.

    • பயிர் பாதுகாப்பு மேலாண்மை, அறுவடை கூலி என மொத்தம் ரூ.10 ஆயிரம் வரை முதலீடு செய்து உள்ளனர்.
    • எலுமிச்சையின் ஊடுபயிராக பந்தல் அமைத்து சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் நகரம், சின்னமுத்தூர், ஊடையம், வேலம்பாளையம், ராசாத்தாவலசு, வள்ளியரச்சல், பூமாண்டன்வலசு, வேலம்பாளையம் ஆகிய வருவாய் சுற்றுவட்டார கிராம கீழ்–பவானி பாசன பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாயம் சார்ந்த சாகுபடி பணிகள் மிகவும் பிரதான தொழில்களாக செய்யப்பட்டு வருகின்றன. இப்பகுதி விவசாயிகள் குறைந்த நீர் நிர்வாகத்தில் அதிக மகசூல் தந்து கூடுதல் வருமானம் மற்றும் கூடுதல் சாகுபடி பலன் தரும் புடலங்காய் சாகுபடி செய்து உள்ளனர். வேலம்பாளையம் ஊராட்சி கிராம பகுதிகளில் விவசாயிகள் எலுமிச்சையின் ஊடுபயிராக பந்தல் அமைத்து புடலங்காய் சாகுபடி செய்து உள்ளனர்.

    இதன்படி பந்தல் அமைத்து 1 ஏக்கர் புடலங்காய் சாகுபடி செய்வதற்கு உழவு கூலி, பந்தல் அமைத்தல், அடி உரம் இடுதல், விதை ஊன்றுதல், நீர் மேலாண்மை, உர மேலாண்மை, களைக்கொல்லி பராமரித்தல், பயிர் பாதுகாப்பு மேலாண்மை, அறுவடை கூலி என மொத்தம் ரூ.10 ஆயிரம் வரை முதலீடு செய்து உள்ளனர்.

    இந்த புடலங்காய் செடிகளில் பூக்கள் பூத்து பிஞ்சாக காய்த்து உள்ளன. இதுபற்றி புடலங்காய் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூறியதாவது:-

    பொதுவாக புடலங்காய் கோடை மற்றும் மிதமான குளிர் காலத்தில் சாகுபடி செய்தாலும் பருவ கால சூழ்நிலைக்கு ஏற்ப கூடுதல் பலன் தரக்கூடியது. மேலும் புடலங்காய் குறைந்த நீர் நிர்வாகத்தில் கிணற்று நீர், ஆழ்குழாய் கிணற்று நீரை பயன்படுத்தி ஒரு சில பகுதிகளில் எலுமிச்சையின் ஊடுபயிராக பந்தல் அமைத்து சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

    புடலங்காய் பறித்து நத்தக்காடையூர், அரச்சலூர், முத்தூர், காங்கயம், சிவகிரி, கந்தசாமிபாளையம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் தினசரி காய்கறி விற்பனை கடைகள் மற்றும் திருப்பூர், ஈரோடு, ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுக்கு எடைக்கு ஏற்ப மொத்தமாகவும் அன்றைய நாளுக்கு ஏற்ப உரிய விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்து விடலாம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×