ஆன்மிகம்

ஆகமங்கள் சொல்லும் மாத சிவராத்திரி

Published On 2018-02-23 10:07 GMT   |   Update On 2018-02-23 10:07 GMT
மாத சிவராத்திரி பற்றி மாத சிவராத்திரி விரத கல்பம் என்னும் நூல் விரிவாகச் சொல்லுகிறது. அதன் சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
சிவபெருமானை லிங்கவடிவில் வழிபடும் தொடர்பாகப் பல புராண வழக்குகள் உள்ளன. திருமாலுக்கும், பிரமனுக்கும் தம் சக்தியை உணர்த்தப் பேரொளிப் பழம்பாக, அண்ணாமலையாகச் சிவபெருமான் நின்ற வரலாறு அனைவரும் அறிந்ததே, ஜோதி சொருபமே லிங்கம்.

மாத சிவராத்திரி பற்றி மாத சிவராத்திரி விரத கல்பம் என்னும் நூல் விரிவாகச் சொல்லுகிறது. அதன் சுருக்கம் வருமாறு:-

1.சித்திரைமாதம்:- இம்மாதம் தேய்பிறை அஷ்டமி சிவராத்திரி உமா தேவியால் வழிப்பட்டது.

2.வைகாசி மாதம்:- வளர்பிறை, அஷ்டமி சிவராத்திரி சூரிய பகவனால் வழிபடப்பட்டது.

3.ஆனி மாதம்:- வளர்பிறை சதுர்த்தசி சிவராத்திரி ஈசானனால் வழிப்படப்பட்டது.

4.ஆடி மாதம்:- தேய்பிறை பஞ்சமி சிவராத்திரி முருகனால் வழிபடப்பட்டது.

5.ஆவணி மாதம்:- வளர்பிறை-அஷ்டமி சிவராத்திரி சந்திரனால் வழிபடப்பட்டது.

6.புரட்டாசி மாதம்:- வளர்பிறை திரியோதசி சிவராத்திரி ஆதி சேஷனால் வழிபடப்பட்டது.

7.ஐப்பசி மாதம்:- வளர்பிறை-துவாதசி சிவராத்திரி இந்திரனால் வழிபடப்பட்டது.

8.கார்த்திகை மாதம்:-2 சிவராத்திரி வளர்பிறை சப்தமியும் தேய்பிறை அஷ்டமியும் சிவராத்திரிகள் இவற்றை சரஸ்வதி தேவியால் வழிபடப்பட்டது.

9.மார்கழி மாதம்:- வளர்பிறை, தேய்பிறையில் வரும் சிவராத்திரி லட்சுமியால் வழிபடப்பட்டது.

10.தை மாதம்:- வளர்பிறை-நந்தி தேவரால் வழிபடப்பட்டது.

11.மாசி மாதம்:- தேய்பிறை- தேவர்களால் வழிபடப்பட்டது.

12.பங்குனி மாதம்:- வளர்பிறை-குபேரனால் வழிபடப்பட்டது.

வில்வ மகிமை

குபேரன் விரதமிருந்து ஏராளமான நிதிகளைப் பெற்று பெரும் செல்வம் பெற்றவனாக ஆனான். இந்திரனோ தேவர்களுக்கு எல்லாம் தலைவன் ஆனான்.
வில்வ இலை ரொம்பவே உயர்வானது. வில்வத்தோட பெருமைகளைப் பற்றி சிவபுராணம் விரிவாக சொல்லி உள்ளது. வில்வமரத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள். ஒரு வில்வ மலரானது ஒரு லட்சம் தங்க புஷ்பங்களுக்கு இணையானது என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படி என்றால் அதோட சிறப்பு உங்களுக்குப் புரியுமே.

அதைத் தவிர ஒரு வில்வ மரத்தை வீட்டுல வளர்த்தால் அஸ்வமேத யாகம் செஞ்ச பலனும், ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலனும், கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலனும் உலகில் உள்ள அத்தனை சிவாலயங்களைத் தரிசித்த பலனும் கிடைக்கும்.

அதைத் தவிர வில்வத்துக்கு மட்டுமே உள்ள தனிச் சிறப்பு அதற்கு நிர்மால்ய தோஷம் கிடையாது. அதைப் பறித்து எத்தனை நாள்கள் ஆனாலும் உலர்ந்து போனாலும் கூட பூஜைக்குப் பயன்படுத்தலாம். மற்ற மலர்களையோ இலைகளையோ அந்த மாதிரிப் பயன்படுத்தக் கூடாது. இது வில்வத்துக்கு மட்டுமே உள்ள தனிச் சிறப்பு.
Tags:    

Similar News