ஆன்மிக களஞ்சியம்

துளசி இல்லாத பூஜையை மகாவிஷ்ணு ஏற்றுக் கொள்வதில்லை!

Published On 2024-05-23 11:00 GMT   |   Update On 2024-05-23 11:00 GMT
  • கன்னிப்பெண்கள் பூஜித்தால் நல்ல கணவனை பெறுவார்கள்.
  • சுமங்கலிகள் பூஜித்தால் தீர்க்க சவுமாங்கல்யத்தையும் சகல சவுபாக்கியங்களையும் பெறுவார்கள்

ஸ்ரீ மகாலட்சுமியே இந்த துளசி செடியாய் மாறி ஸ்ரீ மகா விஷ்ணுவிற்கு மிகவும் விருப்பமுள்ள மலராக விளங்குகிறார்.

துளசி இல்லாத பூஜையை மகா விஷ்ணு ஏற்றுக்கொள்வதில்லை.

திருத்துழாய் என்ற பெயரில் பெருமாள் கோவில்களில் சிறந்த பூஜை பொருளாக விளங்குவது இந்த துளசியே.

துளசி உள்ள இடத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணு எப்போதும் வாசம் செய்கிறார்.

துளசியினால் விஷ்ணுவை பூஜித்தால் ஆயிரம் பால் குடங்கள் கொண்டு அபிஷேகம் செய்த மனமகிழ்ச்சியை ஸ்ரீமகா விஷ்ணு அடைகிறார்.

கடைசி காலத்தில் துளசி தீர்த்தம் உட்கொண்டால் பிறவி நீங்கி வைகுண்ட பதவி கிடைக்கும்.

துளசியினால் ஸ்ரீமகா விஷ்ணுவை மட்டுமின்றி ஸ்ரீ மகா தேவனையும் அர்ச்சிக்கலாம். ஏனெனில் அவர் ஸ்ரீ சங்கர நாராயணராக இருக்கிறார்.

இத்தகைய மகிமை வாய்ந்த ஸ்ரீ துளசியை நம் வீடுகளில் அழகிய மாடங்களில் வளர்த்து பக்தி சிரத்தையுடன் பூஜித்தால் வாழ்க்கையில் சர்வ மங்கலங்களையும் பெறலாம்.

கன்னிப்பெண்கள் பூஜித்தால் நல்ல கணவனை பெறுவார்கள்.

சுமங்கலிகள் பூஜித்தால் தீர்க்க சவுமாங்கல்யத்தையும் சகல சவுபாக்கியங்களையும் பெறுவார்கள்

Tags:    

Similar News