ஆன்மிகம்
சிதம்பரம் அருகே வினைதீர்த்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது எடுத்த படம்.

வினைதீர்த்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2017-10-05 04:18 GMT   |   Update On 2017-10-05 04:18 GMT
சிதம்பரம் அருகே பண்ணப்பட்டு கிராமத்தில் உள்ள வினை தீர்த்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சிதம்பரம் அருகே பண்ணப்பட்டு கிராமத்தில் வினை தீர்த்த விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதன்படி திருப்பணிகள் நடைபெற்று வர்ணங்கள் பூசப்பட்டு கோவில் தற்போது புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

இக்கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் விக்னேஷ்வர பூஜை, தொடர்ந்து வாஸ்துசாந்தி, நவக்கிரக ஹோமம், முதல்கால யாகசாலை பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

இதையடுத்து நேற்று காலையில் 2-ம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை, பூர்ணாகுதி நடந்தது. இதையடுத்து யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து கருவறையில் உள்ள கற்பக விநாயகர், சுப்பிரமணியர் ஆகிய சாமிகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் சிதம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News