ஆன்மிக களஞ்சியம்

இரணியன் எதிரியாக பார்த்த நாராயணர் மேல் பக்தி கொண்ட பிரகலாதன்

Published On 2024-05-05 10:04 GMT   |   Update On 2024-05-05 10:04 GMT
  • கல்வி துவங்குவதற்கு முன் கடவுள் வணக்கம் சொல்ல சொன்னார்கள்.
  • அந்த நாட்டில் இரண்யன் அல்லவா கடவுள். ஆகவே, “ஓம் இரண்யாய நம” என்று கூறச் சொன்னார்கள்.

இரணிய கசிபுவுக்கு பிரகலாதன் என்ற ஒரு மகன் பிறந்தான்.

குழந்தைப் பருவம் முதலே அவன் திருமாலின் தீவிர பக்தனாக விளங்கினான்.

உரிய வயதில் கல்வி கற்க குருகுலம் அனுப்பினார்கள்.

கல்வி துவங்குவதற்கு முன் கடவுள் வணக்கம் சொல்ல சொன்னார்கள்.

அந்த நாட்டில் இரண்யன் அல்லவா கடவுள். ஆகவே, "ஓம் இரண்யாய நம" என்று கூறச் சொன்னார்கள்.

ஆனால், குரு தவறாகக் கூறுகின்றார் என்று சொல்லி உண்மையான கடவுளான நாராயணனின் பெயரை "ஓம் நமோ நாராயணாய நம" என்று சொன்னான் பிரகலாதன்.

குழந்தைக்குச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை என்று மறுபடியும் "ஓம் இரண்யாய நம" என்று சொன்னார் குரு. மறுபடியும் பிரகலாதன் "ஓம் நமோ நாராயணாய நம" என்று சொன்னான்.

மறுபடியும் திருத்திச் சொன்னார். ஆனாலும், பிரகலாதன் முன்பு சொன்ன மாதிரியே "ஓம் நமோ நாராயணாய நம" என்று உறுதிபடக் கூறினான்.

பிரகலாதன் சொல்வது உண்மையான கருத்தாக இருந்தாலும் நமக்கேன் அரசாங்கத்து வீண் பொல்லாப்பு என்று எண்ணி அரண்மனைக்குச் செய்தி சொல்லி பிரகலாதனைத் திருப்பி அனுப்பினார்.

Tags:    

Similar News