ஆன்மிகம்

நவராத்திரிக்கு கொலு வைப்பது எதற்காக?

Published On 2017-09-22 09:20 GMT   |   Update On 2017-09-22 09:20 GMT
நவராத்திரிக்கு கொலு வைப்பது குறித்து, பதினெட்டு புராணங்களில் ஒன்றான மார்க்கண்டேய புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
கொலு வைப்பது குறித்து, பதினெட்டு புராணங்களில் ஒன்றான மார்க்கண்டேய புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

தன் எதிரிகளை வெற்றிக் கொள்வதற்காக மகாராஜா சுரதா, குரு சுமதாவின் ஆலோசனை யைக் கேட்டார்.

குரு கூறியபடி பரிசுத்தமான ஆற்று மணலைக் கொண்டு காளிரூபத்தை செய்தான். அதை காளியாக அலங்கரித்து தெய்வத்தின் மீது பற்றுடன் உண்ணா நோன்பிருந்து மனதாலும் மெய்யாலும் வேண்டினான்.

அம்பிகை அவன் வேண்டுதலை பூர்த்தி செய்து அரக்கர்களையும், பகைவர்களையும் அழித்துப் பின் ஒரு புது யுகத்தினையே உண்டு செய்தாள்.

புராணத்தில், ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையினால் என்னைப் பூஜித்தால் நான் உனக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன் என்றாள் அம்பிகை தேவி.

இதனால் தான் நவராத்திரியில் கொலு வைத்து அம்மனை பூஜிக்கும் மரபு ஏற்பட்டது.
Tags:    

Similar News