வழிபாடு

சின்னமனூர் அருகே அம்மன் மீது சூரிய ஒளி பட்டதால் பக்தர்கள் பரவசம்

Published On 2024-04-27 05:27 GMT   |   Update On 2024-04-27 05:29 GMT
  • அம்மன் குறி சொல்லும் நிகழ்வும் நடைபெற்று வருகிறது.
  • கடந்த 3 ஆண்டுகளாக அம்மன் மீது சூரிய ஒளிபடும் நிகழ்வு தன்னிச்சையாக நடைபெற்றது.

சின்னமனூர்:

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள தாடிச்சோரி பகுதி மக்கள் பஞ்சம் ஏற்பட்டதால் கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்பு மூர்த்தி நாயக்கன்பட்டிக்கு இடம் பெயர்ந்தனர். சில வருடங்கள் கழித்து மீண்டும் தாடிசேரி சென்று சூடம்மாள் அம்மனை வழிபட்ட இடத்தில் இருந்து சிறிது கைப்பிடி மண் எடுத்து வந்து மூர்த்தி நாயக்கன்பட்டியில் சிறிதாக கோவில் எழுப்பி வழிபட்டனர்.

இவ்வாறு உருவான அம்மன் ஊர் மக்களுக்கு கேட்கும் வரத்தை கொடுத்து மிகுந்த சக்தி வாய்ந்த அம்மனாக சூடம்மாள் விளங்கினார். 100 ஆண்டுகளுக்கு பழமையான அம்மன் சன்னதியில் சில வருடங்களுக்கு முன்பு ராஜ கோபுரம் அமைத்து ஊர் மக்கள் விழா எடுத்து சிறப்பாக வழிபட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் 2ம் தேதி 3 நாட்கள் திருவிழா எடுத்து வழிபடுகின்றனர். அம்மன் குறி சொல்லும் நிகழ்வும் நடைபெற்று வருகிறது. தற்பொழுது ராஜகோபுரம் கட்டிய பின்பு கடந்த 3 ஆண்டுகளாக அம்மன் மீது சூரிய ஒளிபடும் நிகழ்வு தன்னிச்சையாக நடைபெற்றது.

இது எவ்வாறு நடைபெறுகிறது என்று தெரியவில்லை ஆனால் சூரிய பகவான் அம்மனை வழிபடுவதை போன்று தத்ரூபமாக சூரிய ஒளி அம்மன் பாதங்களில் விழுகிறது. இதனை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு வழிபட்டனர்.

Tags:    

Similar News