வழிபாடு

ரம்ஜான் நோன்பு தொடங்கியது - பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

Published On 2026-02-19 07:39 IST   |   Update On 2026-02-19 07:39:00 IST
  • ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
  • தமிழகத்தில் இன்று முதல் ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருப்பது. இஸ்லாமிய மாதமான ரம்ஜான் மாத பிறை பார்த்து நோன்பு தொடங்குவது வழக்கம்.

தமிழகத்தில் ரம்ஜான் பிறை நேற்று இரவு காணப்பட்டது. இதனால் ரம்ஜான் நோன்பு இன்று தொடங்குவதாக தமிழக அரசின் தலைமை காஜி என்.பி. உஸ்மான் முஹியித்தின் அறிவித்து இருந்தார். பிறை காணப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் இன்று முதல் ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் புனித ரம்ஜான் நோன்பு இன்று முதல் தொடங்கியது. பள்ளிவாசல்களில் நடைபெற்ற தராவீஹ் சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதேபோல் சென்னை அமைந்தகரையில் உள்ள ஜாமியா பள்ளிவாசலில் ஏராளமான இஸ்லாமியர்கள் அதிகாலையில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News