ஆன்மிகம்

களக்காடு மாசான சுடலை மாடசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா

Published On 2017-09-05 10:26 GMT   |   Update On 2017-09-05 10:26 GMT
களக்காடு மூனாற்று பிரிவில் நாடார் புதுத்தெரு சமுதாயத்தினருக்கு பாத்தியப்பட்ட மாசான சுடலை மாடசுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
களக்காடு மூனாற்று பிரிவில் நாடார் புதுத்தெரு சமுதாயத்தினருக்கு பாத்தியப்பட்ட மாசான சுடலை மாடசுவாமி கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவில் தற்போது புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் நடத்தப்பட்டது. இதையொட்டி கும்பாபிஷேக விழா நடந்தது. முதல் நாள் காலை 6 மணிக்கு மங்கள இசையுடன் விழா துவங்கியது.

தொடர்ந்து சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. மாலை முதல் கால யாகசாலை பூஜைகளும், இரவில் அஷ்டபந்தன மருந்து சாத்துதலும் இடம் பெற்றது. 2-ம் நாளான நேற்று காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன.

அதனைதொடர்ந்து பகல் 9 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. சிவாச்சாரியர்கள் புனித நீர் குடங்களுடன், மேளதாளங்கள் முழங்க கோவிலை சுற்றி வந்தனர். அதன்பின் கோவில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டும், மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

பின்னர் மாசான சுடலைமாடசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகங்களும், விஷேச அலங்கார தீபாராதனைகளும் நடத்தப்பட்டது. தொடர்ந்து மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News