ஆன்மிகம்

சீரடிசாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் 6-ந்தேதி நடக்கிறது

Published On 2017-09-02 04:38 GMT   |   Update On 2017-09-02 04:38 GMT
மதுக்கரை அருகே உள்ள சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் வருகிற 6-ந் தேதி நடக்கிறது.
கோவை மாவட்டம் மதுக்கரை குரும்பபாளையம் சூரியபகவான் கோவில் பகுதி அருகே சீரடி சாய்பாபா கோவில் திருப்பணிகள் நடந்து முடிந்தது. இதனால் அந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி சீரடிசாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 6-ந் தேதி நடக்கிறது.

இதையொட்டி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9.15 மணிக்கு மகா கணபதி பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம், மாலை 6 மணிக்கு கங்கா பூஜை, தீர்த்தக்குடம் சுற்றி வருதல், புண்யாக வாசனம், எஜமானர், ஆச்சாரியன் அழைப்பு, மகா சங்கல்பம் நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு முதல் கால யாக பூஜை ஆகியவை நடக்கிறது.

5-ந் தேதி காலை 8.30 மணிக்கு கும்ப பூஜை, 2-வது கால யாக பூஜை, தீபாராதனை, மாலை 6 மணிக்கு 3-ம் கால யாக பூஜை, திருமஞ்சனம், தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.

6-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு கும்ப பூஜை, கோ பூஜை, 4-ம் கால யாகபூஜை, ஹோம குண்டங்களில் பிரதான ஹோமம், நித்ய ஹோமம், தசதானம், கடம் புறப்பாடு நடக்கிறது. காலை 6.15 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் சீரடி சாய்பாபா மற்றும் மகாகணபதி, யோகிராம் சுரத்குமார், ஆஞ்சநேயர் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
Tags:    

Similar News