ஆன்மிகம்

ஆடி மாதத்தில் திருமணம் செய்யாதது ஏன்?

Published On 2017-07-31 10:11 GMT   |   Update On 2017-07-31 10:11 GMT
பொதுவாக திருமணம், புதுமனை புகுவிழா போன்ற சுபநிகழ்ச்சிகள் செய்ய ஆடி, மார்கழி மாதங்கள் ஏற்றதல்ல என்று கூறப்படுவதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக திருமணம், புதுமனை புகுவிழா போன்ற சுபநிகழ்ச்சிகள் செய்ய ஆடி, மார்கழி மாதங்கள் ஏற்றதல்ல. அவை பீடை மாதங்கள் என கூறப்படுவது உண்டு. அது தவறு. ஆடி, மார்கழி மாதங்கள் மக்களை இறைவழியில் அழைத்துச் செல்லும் மாதம். பீடு நிறைந்த மாதம். மக்கள் மன பீடத்தில் இறைவனை நிலைநிறுத்துகிற மாதம். அதனால் தெய்வ சிந்தனையில் இருப்பதால் வீட்டில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை.

ஆடி மாதத்தில் திருமணம் நடைபெற்றால் 10 மாதங்கள் கழித்து சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும் போது வெப்பம் அதிகமாக இருக்கும். இந்த மாதத்தில் குழந்தை பிறந்தால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் தான் ஆடி மாதத்தில் திருமணம் செய்வதையும், கணவன்-மனைவி கூடி இருப்பதையும் தவிர்த்தனர். மேலும் ஆடி மாதத்தில் தெற்கு திசையில் பூமி நகரும் போது விஞ்ஞான ரீதியாக நில அதிர்வுகளும், கடல்சீற்றமும் ஏற்படும். அதிக காற்று வீசும். பலத்த மழை பெய்யும். அதனால் மனையடி கோலம், கிரக பிரவேசம் போன்றவற்றை செய்வதில்லை.
Tags:    

Similar News