ஆன்மிகம்
திருவையாறில் ஐயாறப்பர் கோவில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

ஆடிப்பூர திருவிழாவையொட்டி ஐயாறப்பர் கோவில் தேரோட்டம்

Published On 2017-07-26 03:09 GMT   |   Update On 2017-07-26 03:09 GMT
ஆடிப்பூர திருவிழாவையொட்டி திருவையாறு ஐயாறப்பர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஐயாறப்பர் கோவில் உள்ளது. இங்கு ஐயாறப்பர், அறம்வளர்த்த நாயகி அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழா, கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. தேரில் அறம் வளர்த்த நாயகி சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

தேரோட்ட நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீனம் இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர். தேரோட்டத்தையொட்டி திருவையாறில் துணை போலீஸ் சூப்பிரண்டு அன்பழகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Tags:    

Similar News