ஆன்மிகம்

சந்திராஷ்டமம் நடக்கும்போது வணங்க வேண்டிய தெய்வங்கள்

Published On 2017-07-05 09:48 GMT   |   Update On 2017-07-05 09:48 GMT
உங்களுக்கு சந்திராஷ்டமம் நடக்கும் போது புதிய செயல்கள் தொடங்குவதை தவிர்த்து விடுவது நல்லது. சந்திராஷ்டமம் நடக்கும்போது வணங்க வேண்டிய தெய்வங்கள் என்னவென்று பார்க்கலாம்.
கோட்சாரத்தில் ராசிக்கு 8ல் சந்திரன் வரும்போது சந்திராஷ்டமம் தான். அப்போது கண்டிப்பாக, மன நிலை கோபமாக அல்லது வருத்தமாக மேலும் குழப்பமாக இருக்கும்.

சந்திராஷ்டமம் நடக்கும்போது, வணங்க வேண்டிய தெய்வங்கள் :

என்னதான் சந்திரன் மனக்காரன் என்றாலும், அனைவருக்கும் மன உளைச்சல் ஏற்படுத்துவது கேது தான், சந்திராஷ்டமம் நடக்கும் போது மன ரீதியாக தான் அதிக பாதிப்பு. அதனால் விநாயகர் வழிபாடு, மேலும் 8ஆம் அதிபதியின் அதி தேவதை, சந்திரனின் அதி தேவதையான பார்வதி தேவி வழிபாடு, கேதுவின் அதி தேவதையான இந்திரன் வழிபாடு, மேலும் 8ஆம் வீட்டில் சந்திரன் எந்த நட்சத்திர சாரத்தில் செல்கிராறோ அந்த நட்சத்திர அதிபதியின் வழிபாடு, இங்கே சொல்லப்பட்ட எல்லா வழிபாடும் செய்ய வேண்டியதில்லை, ஏதாவது ஒரு வழிபாட்டை அல்லது உங்களால் முடிந்ததை செய்யுங்கள்...!!!

இன்னொரு முக்கியமான. விசயம், 8ல் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் போகிறாறோ அந்த நட்சத்திர அதிபதி, கோட்சாரத்தில் ராசிக்கு சாதகமான இடங்களில் இருந்தால், சந்திராஷ்டமம் பாதிப்பு குறைவு...!!!
Tags:    

Similar News