ஆன்மிகம்

மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் வருண ஜெப வேள்வி

Published On 2017-05-22 10:41 GMT   |   Update On 2017-05-22 10:41 GMT
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் பிரசித்தி பெற்ற வனபத்ர காளியம்மன் கோவிலில் மழை வேண்டி வருண ஜெபம் வேள்வி இன்று நடைபெற்றது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் பிரசித்தி பெற்ற வனபத்ர காளியம்மன் கோவிலில் மழை வேண்டி வருண ஜெபம் வேள்வி இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியையொட்டி அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள், தீபாராதனை, கலச அபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கோவில் தலைமை பூசாரி பரமேஸ்வரன் சிறப்பு பூஜைகளை செய்தார். அதனைத்தொடர்ந்து கோவில் உதவி ஆணையரும், செயல் அலுவலருமான ராமு தலைமையில் ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள முத்தமிழ் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் காலை 7 மணிக்கு நடைபெற்றது.

அதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் அலங் கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மன் திருவுருவச்சிலை முன்பு விநாயகர் பூஜை, சங்கல்பம், புண்ணியாக வாஜனம், பஞ்சகவ்ய பூஜை, வருண ஆவாஹனத்திற்கு பின்னர் சிவாச்சாரியார்கள் நாதஸ்வர இசை மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்று பவானி ஆற்றில் நின்று வருண ஜெபம் செய்தனர்.

அதன்பின்னர் கோவில் வளாகத்தில் தனசேகர குருக்கள் தலைமையில் கண்ணன் குருக்கள், ராஜா சிவாச்சாரியார், ரமேஷ்சிவம், விக்னேஷ்சிவம் ஆகியோர் யாகம் வளர்த்து வருண ஜெபஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தி வைத்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏ.கே.செல்வராஜ் எம்.பி. மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News