ஆன்மிகம்
சமாதானபுரம் தேவி முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்த போது எடுத்த படம்.

சமாதானபுரம்தேவி முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2017-05-02 04:46 GMT   |   Update On 2017-05-02 04:47 GMT
அகஸ்தீஸ்வரம் அருகே சமாதானபுரத்தில் உள்ள தேவி முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அகஸ்தீஸ்வரம் அருகே சமாதானபுரத்தில் தேவி முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் ரூ.1 கோடியே 30 லட்சத்தில் புனரமைக்கப்பட்டு ராஜகோபுரமும், பிரகார மண்டபமும் கட்டப்பட்டது.

அதைத்தொடர்ந்து கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு 2-ம் கால பூஜையும் அதைத்தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. 9 மணிக்கு யாக சாலையில் இருந்து கடம் எடுத்து வரப்பட்டு, 9.15 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பிறகு அகஸ்தீஸ்வரம் குலசேகர விநாயகர் கோவிலில் இருந்து மேளதாளத்துடன் பால், பன்னீர், சந்தனம், களபம், மஞ்சள் குடங்கள் மற்றும் முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அம்மனுக்கு மகா அபிஷேகமும், அதைத்தொடர்ந்து அலங்கார தீபாராதனை காட்டப்பட்டது.

மதியம் நடந்த சமபந்தி விருந்தை தொழில் அதிபர் டாக்டர் சி.என்.ராஜதுரை தொடங்கி வைத்தார்.

விழாவில் ராஜாமணி, வக்கீல்கள் சுயம்புலிங்கம், தியாகராஜன், அரசு ஒப்பந்தக்காரர் செல்வகுமார், மதன், சுதன், பாபு, தாமரை தினேஷ், உதவி பேராசிரியர் ஹரிஷ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News