ஆன்மிக களஞ்சியம்

திட்டை சென்றால் திருப்பம் நிச்சயம்!

Published On 2024-04-30 11:40 GMT   |   Update On 2024-04-30 11:40 GMT
  • ஒருவரின் வாழ்வில், குருவின் கடாட்சம் இருந்துவிட்டால், செய்யும் தொழில் சிறக்கும்.
  • பதவி உயர்வு இருக்கும். நல்ல குழந்தைகள் கிடைப்பார்கள்.

குருவின் பார்வை இருந்தால்தான் எல்லா நல்ல விஷயங்களும் நம்மைத் தேடி வரும் என்பது ஐதீகம்.

உமையவளுக்கே குருவின் பார்வை கிடைத்ததும்தான் திருமணம் நடந்தேறியது என்கிறது புராணம்.

நவக்கிரகங்களில் சுபகிரகம் வியாழ பகவான்.

அந்த வியாழ பகவான் தான், தேவர்களின் குரு.

அவரை பிரகஸ்பதி என்பார்கள். இவர்தான் குரு பகவான். குருப்பெயர்ச்சி என்பது இவருக்குத்தான்.

இவரை வைத்துத்தான் குருப்பெயர்ச்சி.

ஒருவரின் வாழ்வில், குருவின் கடாட்சம் இருந்துவிட்டால், செய்யும் தொழில் சிறக்கும்.

பதவி உயர்வு இருக்கும். நல்ல குழந்தைகள் கிடைப்பார்கள். குருவருளுடன் இறையருளும் கிடைக்கப்பெறுவார்கள்.

நவக்கிரகத்தில் உள்ள வியாழ பகவான், தேவர்களின் குரு! குருவுக்கெல்லாம் குரு! ராஜகுரு

இந்த ராஜகுருவுக்கு அதிதேவதையாகத் திகழ்பவர் தட்சிணாமூர்த்தி.

அதனால்தான் குருப்பெயர்ச்சி முதலான தருணங்களில், தட்சிணாமூர்த்திக்கு விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன.

ராஜ குரு என்று போற்றப்படும் வியாழ பகவான், தனிச்சந்நிதியில் இருந்து அருள்பாலிக்கும் திருத்தலம் தென்குடித்திட்டை.

வேதங்கள் நான்கும் சிவனாரை வணங்கி வழிபட்ட திருத்தலம் என்று திட்டை ஸ்தல புராணம் தெரிவிக்கிறது.

திருஞான சம்பந்தர், இந்தத் தலத்து இறைவனை, வசிஷ்டேஸ்வரரை மனமுருகிப் பாடியுள்ளார்.

தலத்தின் பெருமையைச் சிலாகித்துப் போற்றியுள்ளார்.

Tags:    

Similar News