ஆன்மிகம்

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் தீர்த்தங்கள்

Published On 2016-10-20 09:14 GMT   |   Update On 2016-10-20 09:14 GMT
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் உள்ள தீர்த்தங்கள் என்னவென்று கீழே பார்க்கலாம்.
1. அமிருத புஷ்கரணி :

இத்திருக்குளம் கீழ் இராஜகோபுரத்திற்கும் இரண்டாஞ்சுற்றுக்கும் இடையில் உள்ளது. இதில் மூழ்கியயோர் பவப்பிணி மாய்த்துப் பெருநிலையுறுவர். இத்திருக்குளத்தின் மேல் கரையின்கண் அமிருதசித்தி விநாயகர் ஆலயம் உள்ளது. இவ்வாவியினின்றும் தேவர்கட்கு அமிருதம் அளிக்க பெற்றது.

2. கால தீர்த்தம் :

இஃது ஆனைக்குளமாகும். இவ்வூரினுக்குப் பேரணியாயிலகுவது. இயமனால் தோற்றுவிக்கப்பெற்றது. இதன் தென்கரையில் காலனால் பூசிக்கப்பட்ட காலேசுவரர் ஆலயம் இருக்கிறது. இத்தீர்த்தத்தில் மூழ்கிப் பூசித்து வழிபடுவோர்க்கு பேரருள் புரிய வேண்டுமென வரம் பெற்றார் இயமயனார்.

3. மார்க்கண்டேய தீர்த்தம் :

இது திருக்கடவூர் மயானத்தின் கண் கூபவடிவமாக உள்ளது. மார்க்கண்டர் வேண்டுகோட்படி கங்காதீர்த்தம் இக்கூபத்தில் தோன்றியது. அமிருதலிங்கேசருக்கன்றி ஏனைய கடவுளருக்கு இத்தீர்த்தம் அபிஷேகத்திற்கு எடுக்கப்படுவதில்லை. சங்காபிடேகத்திற்கு இத்தீர்த்தமே எடுத்து செல்லப்படுகிறது. பங்குனி சுக்கிலபட்ச அசுவனியில் சுவாமி தீர்த்தங் கொடுத்தருளுவார். அன்றுதான் எல்லோரும் அத்தீர்த்தத்தில் மூழ்குவார்கள். காவிரி தீர்த்தம். அம்மனாறு முதலிய பல தீர்த்தங்களும் உள்ளன.

Similar News