சினிமா

கர்நாடகாவில் மோதல்: `மெர்சல்' படம் திரையிடுவது நிறுத்தம்

Published On 2017-10-19 08:18 GMT   |   Update On 2017-10-19 08:18 GMT
கன்னட அமைப்பினருக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து பெங்களூரு - மைசூருவில் மெர்சல் படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது.
நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று முதல் திரையிடப்பட்டது.

பெங்களூரு மல்லேஸ் வரம் ஸ்ரீ ராதாகிருஷ்ணா தியேட்டரில் மெர்சல் திரைப்படம் நேற்று திரையிடப்பட்டது. இதற்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மெர்சல் பட பேனரை கிழித்தனர். தமிழில் விஜயை வாழ்த்தி எழுதி வைத்திருந்த வாசகங்களையும் அழித்தனர். இதனால் விஜய் ரசிகர்களுக்கும், கன்னட அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் காரணமாக அந்த தியேட்டரில் மெர்சல் படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது. கர்நாடக போலீசார் விரைந்து வந்து மோதலை கட்டுப்படுத்தினார்கள். பின்னர் அந்த தியேட்டரில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.



இதேபோல மைசூருவில் உள்ள ஒரு தியேட்டரிலும் விஜய் படம் திரையிட கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அங்கும் மெர்சல் படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது.

Tags:    

Similar News