செய்திகள்

பாலியல் வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய நிர்மலாதேவியின் மனு தள்ளுபடி

Published On 2018-12-04 10:32 GMT   |   Update On 2018-12-04 10:32 GMT
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய நிர்மலாதேவியின் மனுவை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. #Nirmaladevi #Nirmaladeviaudiocase
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். இவருக்கு உடந்தையாக இருந்த பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதானார்கள்.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கை விசாரித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் எங்கள் மீது அரசு தரப்பு குற்றம் சாட்டுவதில் எந்த முகாந்திரமும் இல்லை. எனவே வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என நிர்மலாதேவி ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மனு தாககல் செய்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி முருகன், கருப்பசாமியும் மனு செய்தனர்.

இந்த வழக்கு இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நிர்மலாதேவியை வழக்கில் இருந்து விடுவிக்க அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய நிர்மலாதேவியின் மனுவை மாஜிஸ்திரேட்டு தள்ளுபடி செய்தார். முருகன், கருப்பசாமியின் மனுவும் நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து வழக்கின் மூல விசாரணையை நீதிபதி வருகிற 7-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். #Nirmaladevi #Nirmaladeviaudiocase
Tags:    

Similar News