search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலியல் வழக்கு"

    • குற்றத்திற்கான அளவுகோல்களை பூர்த்தி செய்யவில்லை என்று கூறிய நீதிபதி, தனது தீர்ப்பை நியாயப்படுத்தினார்.
    • சமூக வலைத்தளங்களில் தீர்ப்பை விமர்சனம் செய்தும், கண்டனம் தெரிவித்தும் கருத்துக்களை பதிவிட்டவண்ணம் உள்ளனர்.

    இத்தாலியில் பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபரை நீதிமன்றம் விடுதலை செய்தது. விடுதலை செய்ததற்கு நீதிபதி சொன்ன காரணம் அனைவரையும் அதிருப்தியடைய வைத்துள்ளது.

    ரோம் நகரில் உள்ள பள்ளியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 17 வயது சிறுமியை அந்த பள்ளியின் காப்பாளர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அந்த சிறுமி படிக்கட்டில் ஏறிக்கொண்டிருந்தபோது பின்னால் இருந்து அவரது பேண்டை பிடித்து இழுத்ததுடன், பின்பகுதியை தொட்டு, உள்ளாடையையும் பிடித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது அந்த நபர், சிறுமியை பிடித்து இழுத்ததை ஒப்புக்கொண்டார். ஆனால், கேலியாக இவ்வாறு செய்தேன் என கூலாக கூறியிருக்கிறார்.

    சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட காப்பாளருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கவேண்டும் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.

    எனினும் விசாரணை முடிந்து சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டபோது குற்றம்சாட்டப்பட்ட காப்பாளரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் வினோதமாக இருந்தது. அதாவது இந்த சம்பவம் 10 வினாடிகளுக்கும் குறைவாகவே நடந்ததாம். 10 வினாடிகளுக்கும் குறைவான நேரமே நடந்ததால், குற்றத்திற்கான அளவுகோல்களை பூர்த்தி செய்யவில்லை என்று கூறிய நீதிபதி, தனது தீர்ப்பை நியாயப்படுத்தினார்.

    இந்த தீர்ப்பு இத்தாலி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளங்களில் இந்த தீர்ப்பை விமர்சனம் செய்தும், கண்டனம் தெரிவித்தும் கருத்துக்களை பதிவிட்டவண்ணம் உள்ளனர். சிலர் கேமராவை அமைதியாக உற்றுப் பார்த்தும், 10 வினாடிகள் தங்கள் அந்தரங்க பகுதிகளை தொட்டுப் பார்த்தும் வீடியோக்களை வெளியிடத் தொடங்கினர். இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்ற தளங்களில் "brief groping" அல்லது "10 seconds" போன்ற ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தி தாறுமாறாக கருத்துக்களை பதிவிட, இந்த விவகாரம் டிரெண்ட் ஆனது.

    • கடந்த 2004-ம் ஆண்டு தொழில் அதிபர் மனைவி மற்றும் மகளை மயக்கி கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
    • சதுர்வேதி சாமியார் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் வழக்குபதிவு செய்யப்பட்டிருந்தது.

    சென்னை:

    சென்னை தி நகரை சேர்ந்தவர் சதுர்வேதி சாமியார். இவர் மீது கடந்த 2004-ம் ஆண்டு தொழில் அதிபர் மனைவி மற்றும் மகளை மயக்கி கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தில் பக்தர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காக சதுர்வேதி சாமியார் சிறப்பு பூஜைகளை செய்து வந்தார்.

    அப்போது தனது பிரச்சினைகளுக்காக தொழில் அதிபர் ஒருவர் சதுர்வேதி சாமியாரை பார்க்க சென்றபோதுதான் அவரது மனைவியையும் மகளையும் சதுர்வேதி சாமியார் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

    இது போன்று சதுர்வேதி சாமியார் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் வழக்குபதிவு செய்யப்பட்டிருந்தது. மொத்தம் 5 வழக்குகள் அவர் மீது போடப் பட்டிருந்தது. இந்த வழக்கு களில் சதுர்வேதி சாமியார் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். இதன் பின்னர் அவர் தப்பி ஓடி தலை மறைவானார். பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து போலீசார் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று கோர்ட்டில் மனு அளித்தனர். இதை ஏற்று சென்னை மகிளா கோர்ட்டு சதுர்வேதி சாமியாரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது.

    வருகிற 31-ந் தேதிக்குள் சதுர்வேதி சாமியார் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூறும்போது, சதுர்வேதி சாமியார் மீது போடப்பட்டு உள்ள 5 வழக்குகளிலும் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே பாலியல் வழக்கில் அவர் தேடப்படும் குற்றவாளியாக 2020- ம் ஆண்டு அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் 2 வதாக மோசடி வழக்கு ஒன்றில் அவர் தற்போதும் கோர்ட்டால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

    சதுர்வேதி சாமியார் மீதான வழக்குகளில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் இறுதிகட்டத்தை எட்டி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் சதுர்வேதி சாமியார் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
    • அபீல் அபுபக்கர் கேரள மாநில போலீசாரால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பது தெரிந்தது.

    கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் அபீல் அபுபக்கர்(32). இவர் மீது கேரள மாநிலம் திருச்சூர் போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பாலியல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்து இருந்தனர்.

    ஆனால் அபீல் அபுபக்கர் போலீசிடம் சிக்காமல், வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிட்டார். இந்நிலையில் கத்தார் நாட்டில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது அபீல் அபுபக்கர் கேரள மாநில போலீசாரால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை அதிகாரிகள் கைது செய்தனர். இதுபற்றி கேரளமாநில போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அபீல் அபுபக்கரை கைது செய்து அழைத்து சென்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சாமியார் ஆசாராம் பாபுவுக்கான தண்டனை தொடர்பான வாதம் இன்று நடைபெற்றது.
    • சாமியாரின் மனைவி, மகன் உள்ளிட்ட 6 பேரையும் வழக்கில் இருந்து நீதிமன்றம் விடுதலை செய்தது.

    காந்தி நகர்:

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த சாமியார் ஆசாராம் பாபு மீது, சூரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் 2001 முதல் 2006 வரை தான் இருந்த நேரத்தில் சாமியார் ஆசாராம் பாபு தன்னை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் தனது புகாரில் கூறியிருந்தார்.

    2013ல் பதிவு செய்யப்பட்ட இந்த புகார் தொடர்பான வழக்கை குஜராத்தின் காந்தி நகரில் உள்ள கோர்ட் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு, அவரது மனைவி லட்சுமி, மகன் நாராயண் சாய், சாமியாரின் பக்தைகளாக கூறிக்கொண்ட 4 பெண்களும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.

    இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என கோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கியது. மேலும், சாமியாரின் மனைவி, மகன், 4 பெண் பக்தைகளுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என்று கூறிய அந்த 6 பேரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்தது.

    இந்நிலையில், குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஆசாராம் பாபுவுக்கான தண்டனை தொடர்பான வாதம் இன்று நடைபெற்றது. வாதத்தின் முடிவில், ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    ஏற்கனவே ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற ஆசாராம் பாபு, ஜோத்பூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆசாராம் பாபுவுக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படுகிறது.
    • மனைவி லட்சுமி, மகன் உள்ளிட்ட 6 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் சாமியார் ஆசாராம் பாபு. இவருக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உள்பட பல இடங்களில் ஆசிரமம், அறக்கட்டளைகள் உள்ளன. சாமியார் ஆசாராம் பாபு மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. 2013-ம் ஆண்டு ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2018-ம் ஆண்டு ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் ஜோத்பூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

    இதனிடையே, குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் 2001 முதல் 2006 வரை தான் இருந்த நேரத்தில் சாமியார் ஆசாராம் பாபு தன்னை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக சூரத்தைச் சேர்ந்த பெண், அகமதாபாத்தில் உள்ள சந்த்கேடா போலீசில் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

    2013ல் பதிவு செய்யப்பட்ட இந்த புகார் தொடர்பான வழக்கை குஜராத்தின் காந்தி நகரில் உள்ள கோர்ட் விசாரித்து வந்தது. பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு, அவரது மனைவி லட்சுமி, மகன் நாராயண் சாய், சாமியாரின் பக்தைகளாக கூறிக்கொண்ட 4 பெண்களும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.

    இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என கோர்ட் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், சாமியாரின் மனைவி, மகன், 4 பெண் பக்தைகளுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என்று கூறிய அந்த 6 பேரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்தது. ஆசாராம் பாபுவுக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்பட உள்ளது. 

    • மாணவியின் பெற்றோர் நாகா்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
    • போலீசார் அபிஷேக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 22). இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு பாலி டெக்னிக் கல்லூரியில் படித்த போது, சக மாணவி ஒருவரிடம் நெருங்கி பழகி உள்ளார்.

    இந்த நிலையில் மாணவி யிடம் நைசாக பேசிய அபிஷேக், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்து உள்ளார். மேலும் அதனை வீடியோவாகவும் எடுத்து மாணவியை அடிக்கடி மிரட்டி உள்ளார்.

    இதுகுறித்து மாணவி யின் பெற்றோர் நாகா்கோ வில் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் அபிஷேக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    ஆனால் அபிஷேக், துபாய் நாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார். அவரை பிடிக்க போலீசார் நட வடிக்கை எடுத்து வந்த னர். இந்த நிலையில் 2½ ஆண்டுகளுக்கு பிறகு அபிஷேக் துபாயில் இருந்து ஊருக்கு வருவதாக நாகர்கோவில் மகளிர் போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று அபிஷேக்கை கைது செய்தனர்.

    அப்போது அவர் தனக்கு நெஞ்சு வலிப்ப தாக கூறியதால், ஆசாரி ப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்ப ட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் சிகிச்சை நிறைவடைந்ததை தொடர்ந்து, அபிஷேக் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.

    • சுனு மீதான புகார்கள் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
    • கேரள போலீஸ் டி.ஜி.பி. அனில்காந்த், புகாருக்கு ஆளான இன்ஸ்பெக்டர் சுனுவை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோட்டை அடுத்த பைப்பூர் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சுனு.

    இவர் மீது ஒரு பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக உயர் அதிகாரிகள், இவரை பணியில் இருந்து சஸ்பெண்டு செய்தனர்.

    பின்னர் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது.

    இந்த நிலையில் சுனு மீதான புகார்கள் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் சுனு தனது பணிக்காலத்தில் கிரிமினல்களுடன் தொடர்பு வைத்திருந்ததும், இதற்காக 6 முறை பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

    அதன்பின்பும் சுனு தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டது உயர் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. எனவே அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் போலீஸ் டி.ஜி.பி.க்கு பரிந்துரை செய்தனர்.

    இதையடுத்து கேரள போலீஸ் டி.ஜி.பி. அனில்காந்த், புகாருக்கு ஆளான இன்ஸ்பெக்டர் சுனுவை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.

    தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் இன்ஸ்பெக்டர் சுனுவுக்கு போலீஸ் பணியில் நீடிக்க தகுதி இல்லை எனவும் தனது உத்தரவில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

    இதற்கிடையே பணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து கோர்ட்டில் முறையிடப்போவதாக சுனு தெரிவித்துள்ளார்.

    தன்மீது ஒரு வழக்கு மட்டுமே நிலுவையில் உள்ளது. அதனையும் விரைந்து முடிக்க கேரள ஐகோர்ட்டை அணுக உள்ளதாகவும் அவர் கூறினார்.

    • மத்திய பிரதேச அரசுக்கு எதிராக மாவட்ட நீதிமன்றத்தில் காந்து வழக்கு தொடர்ந்து உள்ளார்.
    • கடவுள் கொடுத்த வரமான பாலியல் இன்பம் அடைய விடாமல் தடுத்துவிட்டதாக மனுவில் கூறி உள்ளார்

    போபால்:

    மத்திய பிரதேசம் ரத்லமில் உள்ள பழங்குடியின இனத்தை சேர்ந்தவர் காந்து, கான்டிலால் பீல் (வயது 35). இவர் மீது கடந்த 2018ம் ஆண்டு ஒரு பெண் பாலியல் புகார் கொடுத்தார். சகோதரரின் வீட்டில் கொண்டு விடுவதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் வேறு ஒரு நபரிடம் விட்டுச் சென்று, அந்த நபர் 6 மாதமாக தன்னை சீரழித்தாகவும் அந்த பெண் தனது புகார் மனுவில் கூறியிருந்தார். அதன்பேரில் காந்துவை கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி போலீசார் கைது செய்தனர்.

    சுமார் 2 ஆண்டு சிறைவாசம் அனுபவித்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவரை நீதிமன்றம் விடுதலை செயத்து. இதையடுத்து போலி குற்றச்சாட்டில் தன்னை சுமார் 2 ஆண்டுகள் சிறையில் அடைத்ததற்காக, 10,006 கோடி ரூபாய் இழப்பீடு கோரி, மத்திய பிரதேச அரசுக்கு எதிராக மாவட்ட நீதிமன்றத்தில் காந்து வழக்கு தொடர்ந்து உள்ளார்.

    சிறைவாசத்தால் அவரது குடும்பம் பசி பட்டினியால் வாடியதாகவும், சிறையில் துன்பமும் மன வேதனையும் அடைந்ததாகவும் மனுவில் கூறி உள்ளார். மனித உயிர் விலை மதிப்பற்றது என்று குறிப்பிட்டுள்ள அவர், தனக்கு ஏற்பட்ட பல்வேறு இழப்புகள், கடவுள் கொடுத்த வரமான பாலியல் இன்பம் அடைய விடாமல் தடுத்தல், வழக்கு செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ரூ.10,006 கோடி இழப்பீடு கேட்டுள்ளார். இந்த வழக்கு 10ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

    • தான் மறைத்து வைத்திருந்த கம்பியால் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் மீது கொலை வெறி தாக்கு தல் நடத்தி விட்டு தப்ப முயன்றார்.
    • 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த போக்சோ குற்றவாளி, போலீசாரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள இஞ்சி விளை பகுதியை சேர்ந்த வர் ஸ்டாலின், தொழிலாளி.

    கஞ்சா மற்றும் போதைக்கு அடிமையான இவன், கடந்த 2010-ம் ஆண்டு அதே ஊரை சேர்ந்த ஓரு இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாறசாலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்டாலினை தேடி வந்தனர். ஆனால் அவன் தலைமறைவாகி விட்டான். கடந்த 12 வருடங்களாக போலீசார் பல இடங்களில் தேடியும் ஸ்டாலின் எங்கு உள்ளார் என்பது தெரி யாமல் இருந்தது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஸ்டாலின், தனது சொந்த ஊரான இஞ்சி விளையில் சுற்றி திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து பாறசாலை போலீஸ் நிலைய உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜிதின், ஜாண் ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு விரைந்தனர்.

    அவர்கள் ரகசியமாக கண்காணித்து இஞ்சிவிளை பகுதியில் ஸ்டாலினை சுற்றி வளைத்தனர். போலீசாரை பார்த்ததும் ஸ்டாலின் தப்பி ஓட முயன்றார். மேலும் தான் மறைத்து வைத்திருந்த கம்பியால் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் மீது கொலை வெறி தாக்கு தல் நடத்தி விட்டு தப்ப முயன்றார்.

    ஆனால் சுதாரித்துக் கொண்ட போலீசார் விரைந்து செயல்பட்டு ஸ்டாலினை மடக்கி பிடித்த னர். தொடர்ந்து அவனை கைது செய்து போலீஸ் நிலை யம் கொண்டு சென்று பல கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    12 வருடங்களாக தலை மறைவாக எங்கு தங்கியி ருந்தான்? யார் அவனுக்கு உதவி செய்தார்கள்? என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் தாக்குத லில் காயமடைந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் பாறசாலை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் திருவனந்தபுரம் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த போக்சோ குற்றவாளி, போலீசாரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×