search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சிவராத்திரியின் சிறப்புகள்
    X

    சிவராத்திரியின் சிறப்புகள்

    • சிவம் என்றால் மங்கலம் என்று பொருள்.
    • சிவன் என்றால் மங்கலத்தை அருளுபவன் என்பது பொருள்.

    சிவம் என்றால் மங்கலம் என்று பொருள். சிவன் என்றால் மங்கலத்தை அருளுபவன் என்பது பொருள்.

    சிவபெருமான் எப்பொழுது மங்கலத்தைத் தருவார்?

    சிவராத்திரி அன்று தெரிந்தோ தெரியாமலோ (யதேச்சையாய்) (எதிர்பார்க்காமல்) சிவலிங்கத்திற்குப் பூஜை செய்தால் எல்லா நன்மைகளும் பெறலாம்.

    தெரியாமல் செய்த சிவ பூஜையும் அதனால் கிடைத்த புண்ணியமும் பற்றி சிவமகாபுராணத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

    வேடன் ஒருவன் வேட்டையாட வில் அம்பும் தோல் பையில் தண்ணீரும் எடுத்து சென்றான்.

    காட்டிற்குள் நுழைந்து வேட்டையாட முற்பட்டான்.

    ஒரு மிருகமும் கிடைக்கவில்லை. பொழுது சாய்ந்து இருட்டு வந்து விட்டது.

    அங்கே ஒரு குளம் தென்பட்டது. அதன் அருகில் ஒரு மரம் உயர்ந்து வளர்ந்திருந்தது.

    அவனுக்கு ஒரு யோசனை ஏற்பட்டது. இந்த மரத்தின் மீது அமர்ந்து கொள்வோம்.

    குளத்து நீரைக் குடிக்க பல மிருகங்கள் வரும்.

    நாம் அம்பு எய்து கொல்லலாம் என்று எண்ணி அம்மரத்தின் மேல் ஏறி அமர்ந்து மிருகம் ஏதாவது வருகிறதா? என்று கூர்ந்து கவனித்தான்.

    முதல் ஜாமம் ஒரு மான் நீர்க்குடிக்க வந்தது.

    அம்பு போட முயற்சி செய்த போது தோல்பை நீர் தவறி கீழே வீழுந்தது.

    அது அம்மரத்தடியில் முனிவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த நிசலிங்கத்தை தீர்த்தவாரி (நீராட்டுதல்) செய்தது.

    அம்பைத் தொடுக்கும்போது அதன் நுனி பட்டு வில்வ இலைகள் சிவலிங்கத்தின் மீது விழுந்தன.

    எதிர்பாராத வகையில் நீரும் இலைகளும் விழுந்ததால் அந்த வேடனுக்குச் சிவ பூஜை செய்த புண்ணியம் கிடைத்தது.

    மான் வேடனை நோக்கி, "என் குட்டியை வேறொரு மானிடம் ஒப்படைத்து விட்டு வருகிறேன்" என்று சொல்லி விட்டுச் சென்றது.

    சிறிது நேரம் கழித்து ஆண்மான், பெண்மான், குட்டி மூன்றும் வந்தன.

    அவற்றின் சத்தியத்தைக் கண்ட வேடன் மனம் திருந்தினான்.

    இந்த மான்களிடம் இருக்கும் சத்தியம், நேர்மை, தியாகம் ஆகிய பண்புகள் நம்மிடம் இல்லையே என்று எண்ணி வருந்தினான் மனம் திருந்தினான்.

    அன்று சிவராத்திரி வேடன் இதை அறியவில்லை. வில்வமரம் என்றும் அறியவில்லை.

    அறியாமல் எதிர்பாராத வகையில் சிவபூஜை சிவராத்திரியில் நடந்தேறியது. இவ்வாறு சிவமகாபுராணம் கூறுகிறது.

    Next Story
    ×