search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    காலத்திற்கு ஏற்ற வழிபாடு
    X

    காலத்திற்கு ஏற்ற வழிபாடு

    • சிவராத்திரி அன்று மாலையில் பிரதோஷம், மாலைப் பிரதோஷம் முதல் வழிபாடு தொடங்க வேண்டும்.
    • இவ்வாறு பூஜை செய்ய முடியாதவர்கள் பிறர் செய்வதைக் கண்டு கேட்டுத் தரிசிக்கலாம்.

    சிவராத்திரி அன்று மாலையில் பிரதோஷம், மாலைப் பிரதோஷம் முதல் வழிபாடு தொடங்க வேண்டும்.

    சிவராத்திரிக்கு முந்தைய மாலை காலத்தை நடராஜ் மூர்த்தியையும் பிரதோஷ நாயகரையும் வழிபட வேண்டும்.

    பிரதோஷ நேரத்தில் இறைவனைத் தரிசித்தது முதல் கோவிலிலேயே இருந்து கொண்டு சிவ சிந்தையுடனே ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையாக பூஜை செய்ய வேண்டும். பிறர் செய்வதைக் காண வேண்டும்.

    1. இரவின் முதல் காலம்: (ஜாமம்) சோமஸ்கந்தரை வழிபட வேண்டும். அப்போது பஞ்சகவ்ய அபிஷேகம் சிறந்தது. ரிக்வேதம் ஓத வேண்டும்.

    2. இரண்டாம் காலம்: தென் முகக் கடவுளாகிய தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும். சிவலிங்கத்திற்கு தேன், சர்க்கரை, தயிர், பால், நெய் கலந்த பங்சாமிர்த அபிஷேகம் செய்வது மிகச் சிறந்தது. யசூர் வேதம் ஓத வேண்டும்.

    3. மூன்றாம் காலம் : லிங்கோற்பவரை வழிபடுவது சிறப்பு. திருவண்ணாமலையில் இந்த மூன்றாம் காலத்தில் தான் (ஜாமத்தில்) லிங்கோற்பவ உற்பத்தி ஆயிற்று என்று புராணம் சொல்லுகிறது.

    4. நான்காம் காலம் : சிவராத்திரி நான்காம் காலத்தில் கருப்பஞ்சாறு அபிஷேகம் செய்வது சிறப்பு. கஸ்தூரி மேல் பூச்சாக பூசலாம். பச்சை ஆடை அணிவிக்கலாம். திரநாவுக்கரசர் பாடலைப் பாடலாம். அதர்வண வேதம் ஓதுதல் சிறந்தது.

    இவ்வாறு பூஜை செய்ய முடியாதவர்கள் பிறர் செய்வதைக் கண்டு கேட்டுத் தரிசிக்கலாம்.

    Next Story
    ×