search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    குழந்தைகளை குறிவைக்கும் ஆன்ட்ராய்டு ஆப்ஸ்
    X

    குழந்தைகளை குறிவைக்கும் ஆன்ட்ராய்டு ஆப்ஸ்

    கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் பெரும்பாலான செயலிகள் குழந்தைகளின் தனியுரிமை சட்ட விதிகளை மீறுவது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
    கலிபோர்னியா:

    கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் பெரும்பாலான செயலிகள் குழந்தை தனியுரிமை விதிகளை மீறுவதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    ஏழு பேர் அடங்கிய ஆராய்ச்சியாளர்கள் குழு குழந்தைகளுக்கான சுமார் 6000 செயலிகளை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். ஆய்வு செய்யப்பட்டதில் பெரும்பாலான செயலிகள் குழந்தைகளின் ஆன்லைன் தனியுரிமை பாதுகாப்பு சட்ட விதியை மீறுவது கண்டறியப்பட்டுள்ளது.

    ஆயிரக்கணக்கான செயலிகள் பெற்றோர் அனுமதியின்றி 13 வயதுக்கு உட்ப்பட்ட குழந்தைகளின் தனிப்பட்ட தகவல்களை சேகரித்து இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

    ஆய்வு செய்யப்பட்டதில் ஆயிரக்கணக்கான செயலிகள் டிராக்கிங் மென்பொருள் கொண்டு குழந்தைகளிடம் இருந்து தகவல்களை சேகரித்து இருக்கின்றன. மேலும் 50% செயலிகள் விதிகளுக்கு உட்பட்ட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 



    ஆய்வு செய்யப்பட்ட ஆறு ஆயிரம் செயலிகளில் 5855 செயலிகள் சுமார் 7.5 லட்சத்திற்கும் அதிகமானோர் இன்ஸ்டால் செய்துள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் குழு குறிப்பிட்ட நேரத்தில் செயலிகள் எதுபோன்ற தகவல்களை சேகரிக்கின்றன என்பதை அறிந்து கொண்டனர். இது தொடர்பாக டிஸ்னி, கேம்லாஃப்ட் மற்றும் டியோலிங்கோ உள்ளிட்ட நிறுவனங்கள் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.

    குழந்தைகளுக்கான செயலிகளை உருவாக்கும் டெவலப்பர்கள் முறையான சட்ட விதிகளை பின்பற்றுவதை கூகுள் உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. எனினும் ஆய்வு முடிவுகளில் இதுபோன்ற விதிமுறைகள் பின்பற்றப்படுவதாக தெரியவில்லை என ஆராயாச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    கூகுள் தரப்பில் இதுகுறித்த கருத்து தெரிவிக்கப்படவில்லை. கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் டேட்டா டிராக்கிங் தொழில்நுட்பம் மூலம் அதிகளவு லாபம் ஈட்டியிருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
    Next Story
    ×