search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சர்வதேச சந்தையில் ஐபோன் X படைத்த புதிய சாதனை
    X

    சர்வதேச சந்தையில் ஐபோன் X படைத்த புதிய சாதனை

    சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தை லாபம் ஒரு சதவிகிதம் வரை குறைந்திருக்கும் நிலையில், ஐபோன் X மட்டும் சுமார் 35 சதவிகித லாபத்தை பதிவு செய்துள்ளது.
    வாஷிங்டன்:

    சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையின் லாபம் 2017-ம் ஆண்டின் நான்காவது காலாண்டில் ஒரு சதவிகிதம் சரிவை சந்தித்து இருக்கும் நிலையில், ஐபோன் X மட்டும் சுமார் 35 சதவிகிதம் பங்கு பெற்றிருக்கிறது. இதே காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் ஒரு சதவிகித வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது.

    கவுன்ட்டர்பாயின்ட் ஆய்வு நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையில் 2017 நான்காவது காலாண்டில் பிரீமியம் ஸ்மார்ட்போன் சந்தை எதிர்பார்த்தளவு வளர்ச்சியை பதிவு செய்யவில்லை, எனினும் ஆப்பிள் நிறுவனம் அதிக லாபம் ஈட்டிய நிறுவனமாக இருக்கிறது. மொபைல்போன் சந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் ஆப்பிள் மட்டும் 86 சதவிகித பங்குகளை பெற்றிருக்கிறது.

    2017-ம் ஆண்டின் நான்காவது காலாண்டின் இரண்டு மாதங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்ட ஐபோன் X மட்டும் சந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் 21 சதவிகிதம் பிடித்துள்ளது. சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் மட்டும் ஐபோன் X 35 சதவிகித பங்குகளை பெற்றிருக்கிறது. 

    ஸ்மார்ட்போன் விற்பனையில் ஐபோன் X பங்கு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் சந்தையில் விற்பனை செய்யப்படும் பத்து ஸ்மார்ட்போன்களில் எட்டு ஐபோன் மாடல்களாக இருக்கின்றன. மூன்று ஆண்டுகள் பழைய ஐபோன்களும் விற்பனையாகி வருகிறது.



    இதே காலக்கட்டத்தில் சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் 130 கோடி அமெரிக்க டாலர்களை லாபமாக பதிவு செய்துள்ளன. இவற்றில் பட்ஜெட் மட்டுமின்றி பிரீமியம் ஸ்மார்ட்போன்களும் அடங்கும். இதே போன்று இந்நிறுவனங்களின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விற்பனையும் அதிகரித்துள்ளது.

    600 ஆன்ட்ராய்டு உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்களின் ஒட்டுமொத்த லாபத்தை விட ஐபோன் X லாபம் ஐந்து மடங்கு அதிகமாக இருக்கிறது. மற்ற உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவன ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்கள் லாபம் ஈட்டியுள்ளன. 

    சீன நிறுவனங்கள் பட்டியலில் ஹூவாய் முதலிடம் பிடித்திருக்கும் நிலையில், மற்ற நிறுவனங்கள் சுமார் 59% லாபம் ஈட்டியுள்ளன. அந்த வகையில் வரயிருக்கும் காலாண்டுகளிலும் சீன நிறுவனங்களின் வளர்ச்சி சதவிகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×