search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    மைக்ரோசாஃப்ட் எடிஷன் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் அறிமுகம்
    X

    மைக்ரோசாஃப்ட் எடிஷன் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் அறிமுகம்

    சாம்சங் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மைக்ரோசாஃப்ட் எடிஷன் விற்பனை துவங்கியுள்ளது.
    புதுடெல்லி:

    மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் கஸ்டமைஸ் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை துவங்கியுள்ளது.

    சாம்சங் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் மைக்ரோசாஃப்ட் எடிஷன் மாடலில் எக்செல், ஸ்கைப், கார்டனா, ஒன் நோட், பவர்பாயின்ட், வொர்டு, மைக்ரோசாஃப்ட் லான்ச்சர் போன்ற மைக்ரோசாஃப்ட் செயலிகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன்களின் தோற்றம் மற்றும் சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. 

    ஸ்மார்ட்போனின் இயங்குதளத்திலும் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை எனினும் ஸ்மார்ட்போனின் செயலிகள் மட்டும் வித்தியாசப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட் செயலிகள் எதுவும் வாடிக்கையாளர்கள் அனுமதியின்றி ஸ்மார்ட்போன்களில் பிரீஇன்ஸ்டால் செய்யப்படவில்லை.



    கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களை அன்பாக்ஸ் செய்து வைபை-யுடன் இணைக்கும் போது மைக்ரோசாஃப்ட் எடிஷனுக்கான கஸ்டமைசேஷன் துவங்கும் என மைக்ரோசாஃப்ட் அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மைக்ரோசாஃப்ட் எடிஷன் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களை வாங்க விரும்புவோர் தற்சமயம் அவற்றை முன்பதிவு செய்ய முடியும் என்றாலும் இதன் விநியோகம் மார்ச் 16-ம் தேதி துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் புதிய மைக்ரோசாஃப்ட் எடிஷன் குறைந்தளவு சாதனங்கள் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது.

    சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2018 விழாவில் (பிப்ரவரி 25, 2018) அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மார்ச் 6-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.
    Next Story
    ×