search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    386 ரன்னை சேஸிங் செய்து இங்கிலாந்துக்கு ஹாட்ரிக் அதிர்ச்சி கொடுக்குமா வங்காளதேசம்?
    X

    386 ரன்னை சேஸிங் செய்து இங்கிலாந்துக்கு ஹாட்ரிக் அதிர்ச்சி கொடுக்குமா வங்காளதேசம்?

    ஜேசன் ராய், ஜோஸ் பட்லர், பேர்ஸ்டோவ் அதிரடியால் வங்காள தேசத்திற்கு 386 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து.
    இங்கிலாந்து - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான 12-வது உலகக்கோப்பை லீக் ஆட்டம் கார்டிபில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்காளதேசம் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

    ஜேசன் ராய் மற்றும் பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அணியின் ஸ்கோர் 19.1 ஓவரில் 128 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. பேர்ஸ்டோவ் 50 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜோ ரூட் 21 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.


    ஜேசன் ராய்

    3-வது விக்கெட்டுக்கு ஜேசன் ராய் உடன் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். மறுமுனையில் விளையாடிய ஜேசன் ராய் 92 பந்தில் தனது 9-வது சதத்தை பூர்த்தி செய்தார். சதம் அடித்தபின் ஜேசன் ராய் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மெஹிதி ஹசன் வீசிய 35-வது ஓவரில் முதல் மூன்று பந்தை சிக்சருக்கு தூக்கிய ஜேசன் ராய், 4-வது பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 121 பந்தில் 14 பவுண்டரி, 5 சிக்சருடன் 153 ரன்கள் குவித்தார்.

    ஜேசன் ராய் ஆட்டமிழந்ததும் ஜோஸ் பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இங்கிலாந்து 42.1 ஓவரில் 300 ரன்னைக் கடந்தது. 33 பந்தில் அரைசதம் அடித்த ஜோஸ் பட்லர் 44 பந்தில் 64 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனார். பட்லர் ஆட்மிழக்கும்போது இங்கிலாந்து 45.2 ஓவரில் 330 ரன்கள் குவித்திருந்தது.


    பட்லர்

    5-வது விக்கெட்டுக்கு மோர்கன் உடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். மோர்கன் 33 பந்தில் 35 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 6 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கிறிஸ் வோக்ஸ் 8 பந்தில் 18 ரன்களும், பிளங்கெட் 9 பந்தில் 27 ரன்களும் விளாச இங்கிலாந்து 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 386 ரன்கள் குவித்துள்ளது.

    பின்னர் 387 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் பேட்டிங் செய்து வருகிறது.
    Next Story
    ×