search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வருமான வரித்துறையினர் மூலம் எதிர்கட்சிகளை மத்திய, மாநில அரசுகள் மிரட்டுகிறது- ஐ.பெரியசாமி பேட்டி
    X

    வருமான வரித்துறையினர் மூலம் எதிர்கட்சிகளை மத்திய, மாநில அரசுகள் மிரட்டுகிறது- ஐ.பெரியசாமி பேட்டி

    வருமானவரித் துறை மூலம் எதிர்க்கட்சிகளை மிரட்டும் நடவடிக்கையில் மத்திய- மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன என்று முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி கூறியுள்ளார். #iperiyasamy #tnelection2019

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் கோவிந்தாபுரம் வாசவி மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்த பிறகு நிருபர்களிடம் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது:-

    வருமானவரித் துறை மூலம் எதிர்க்கட்சிகளை மிரட்டும் நடவடிக்கையில் மத்திய- மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. இந்திய தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஜனநாயகப் படுகொலை நடந்தேறியுள்ளது. இது தவறான முன்னுதாரணம். சோதனை என்ற பெயரில் வருமானவரித்துறையினர் எதிர்கட்சி வேட்பாளர்கள் இடங்களில் சோதனை செய்தார்கள். இது மிக மோசமான நிகழ்வு. எதிர்காலத்தில் இது தவிர்க்கப்பட வேண்டும்.

    தேனி மாவட்டத்தில் 150 கோடி ரூபாய் வரை வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் செயல்படவேண்டிய செக்போஸ்டுகள் அனைத்தும் ஓ.பி.எஸ். குரூப்புக்காக திறந்து விடப்பட்டுள்ளன. அங்குள்ள காவல் துறையும் வருமான வரித்துறையும் முறையாக செயல்படவில்லை.

    ஆளும் தரப்பினரின் இந்த நடவடிக்கையை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தி.மு.க. கூட்டணிக்கு அதிக அளவில் வாக்களிக்கிறார்கள். இந்த முறை மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். ராகுல்காந்தி பிரதமராகவும் ஸ்டாலின் முதல்வராகவும் பதவி ஏற்பார்கள் இது நிச்சயம்.

    இவ்வாறு அவர் கூறினார். #iperiyasamy #tnelection2019

    Next Story
    ×