search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேமுதிகவுடன் கூட்டணி: ஓரிரு நாளில் நல்ல முடிவு கிடைக்கும் - ஓ.பன்னீர்செல்வம்
    X

    தேமுதிகவுடன் கூட்டணி: ஓரிரு நாளில் நல்ல முடிவு கிடைக்கும் - ஓ.பன்னீர்செல்வம்

    தேமுதிகவுடன் கூட்டணி குறித்து ஓரிரு நாளில் நல்ல முடிவு கிடைக்கும் என துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். #opanneerselvam #ADMK

    தேனி:

    தேனியில் தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிரூபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 45 ஆண்டுகளாக மாபெரும் இயக்கமான அ.தி.மு.க. 1½ கோடி தொண்டர்களை கொண்ட கட்சியாக உள்ளது. உண்மையான உழைப்பின் காரணத்தால் ஒற்றுமையின் அடையாளமாக இரட்டை இலை சின்னம் மீண்டும் கிடைத்துள்ளது.

    இது தொண்டர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் மேல் முறையீடு செய்தாலும் அ.தி.மு.க.வுக்கே இரட்டை இலை என்பது உறுதி செய்யப்படும்.

    தே.முதி.க.வுடன் கூட்டணி குறித்து தொடர்ந்து பேசி வருகிறோம். ஓரிரு தினங்களில் இது குறித்து நல்ல முடிவு கிடைக்கும். மேகதாது அணையில் மேற்கு பகுதியில் அணை கட்டுவதற்கு கிழக்கு பகுதியில் உள்ள மாநிலங்கள் ஒத்துழைப்பு நல்கினால்தான் அணையை கட்ட முடியும்.

    முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கேரள அரசு அனுமதியின்றி கார் பார்க்கிங் அமைத்து வருகிறது. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை எடுத்து கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவோம். பா.ம.க. அளித்துள்ள 10 கோரிக்கைகள் ஏற்புடையதாக இருந்தால் நிறைவேற்றப்படும். அ.தி.மு.க.வை விட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் திரும்பி வந்தால் எந்த நேரமும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #opanneerselvam #ADMK

    Next Story
    ×