search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேகதாது அணைகட்ட கர்நாடகத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க கூடாது- ஜிகே வாசன்
    X

    மேகதாது அணைகட்ட கர்நாடகத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க கூடாது- ஜிகே வாசன்

    மேகதாது அணைகட்ட கர்நாடகத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க கூடாது என்று தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். #TamilMaanilaCongress #GKVasan #MekedatuDam
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்டுவது தொடர்பாக மத்திய நீர் வளத்துறையிடம் அறிக்கை சமர்பித்தது. இதற்கு ஒப்புதல் தர மறுத்து இதுவரை அறிவிப்பு வெளியிடாத மத்திய பா.ஜ.க. அரசை த.மா.கா. வன்மையாகக் கண்டிக்கிறது. கர்நாடக முதல்வரின் இந்த அத்துமீறல் மத்திய அரசுக்கு ஏன் புரியவில்லை. என்ன காரணத்திற்காக கர்நாடக அரசின் அறிக்கையை மத்திய நீர்வளத்துறை ஏற்றது.

    மேகதாது அணை சம்பந்தமாக கர்நாடக அரசின் முயற்சியை மத்திய அரசு மறுத்திருக்க வேண்டும். இந்த அணைக்கட்டுவது தொடர்பாக தமிழக அரசு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்ததை மத்திய அரசு ஏன் கவனத்தில் கொள்ளவில்லை.

    காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள மேகதாது அணையின் நீரானது கர்நாடகத்துக்கு மட்டும் சொந்தமல்ல. அது தமிழகத்துக்கும் உரியது. அப்படி இருக்கும் போது கர்நாடக அரசின் முயற்சியை ஆரம்பக் கட்டத்திலேயே முடக்க வேண்டியது மத்திய அரசின் கடமை.

    மத்திய அரசு மறைமுகமாகவோ, நேரடியாகவோ கர்நாடக அரசுக்கு ஆதரவாகவும், தமிழகத்துக்கு விரோதமாகவும், தமிழகத்தை வஞ்சிக்கும் விதமாகவும் செயல்பட நினைத்தால் தமிழக மக்கள் மத்திய அரசுக்கு தகுந்த நேரத்தில் தக்க பாடம் புகட்டுவார்கள்.

    எனவே மத்திய அரசு- கர்நாடக அரசிடம் மேகதாதுவில் அணைக்கட்டுவது தொடர்பாக எந்த ஒப்புதலும் அளிக்க முடியாது என்பதை உடனடியாக அறிவிக்க வேண்டும். மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டும், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உட்பட்டும், மாநிலங்களுக்கு இடையேயான நல்லுறவுக்கு வழி வகுக்கும் வகையிலும் கர்நாடக அரசு செயல்பட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

    தமிழக அரசும் இந்த பிரச்சனையில் உறுதியோடு இருந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து கர்நாடக அரசின் நியாயமற்ற முயற்சியை முறியடிக்க வேண்டும்.

    இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார். #TamilMaanilaCongress #GKVasan #MekedatuDam
    Next Story
    ×