search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓசூர் அருகே அரசு டவுன் பஸ் மோதி பள்ளி மாணவி பலி
    X

    ஓசூர் அருகே அரசு டவுன் பஸ் மோதி பள்ளி மாணவி பலி

    ஓசூர் அருகே அரசு டவுன் பஸ் மோதிய விபத்தில் 8-ம் வகுப்பு மாணவி தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தை கண்டித்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சொக்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகள் மானஷா (வயது 14). இவர் நெல்லூர் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று மாலை பள்ளி வகுப்பு முடிந்து வழக்கம் போல் சக மாணவிகளுடன் மானஷா அரசு டவுன் பஸ்சில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது பஸ் சொக்கநாதபுரம் அருகே வளைவில் வேகமாக திரும்பியபோது பஸ் முன்பக்க படிக்கட்டு வழியாக மானஷா மற்றும் ரட்ஷிதா ஆகிய 2 மாணவிகள் தூக்கி வீசப்பட்டனர்.

    இதில் மானஷா கண் இமைக்கும் நேரத்திற்குள் பின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார். மற்றொரு மாணவி ரட்ஷிதாவின் கால் பகுதியில் டயர் ஏறி இறங்கியது. இதில் அவரது கால் முறிந்தது.

    இந்த சம்பவத்தை கண்டு பதறி துடித்த பொதுமக்கள் உடனே ரட்ஷிதாவை மீட்டு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தொடர்ந்து மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படுகாயம் அடைந்த இம்மாணவி 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    அரசு டவுன் பஸ் டிரைவரின் கவனக்குறைவினாலும், வேகமாக பஸ்சை வளைவில் திரும்பியதாலும் தான் இந்த விபத்து ஏற்பட்டது என ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் இன்று காலை 8 மணி அளவில் பள்ளிக்கு செல்லாமல் சொக்கநாதபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    டிரைவர் சக்திவேலை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பதட்டமும், பரபரப்பும் நிலவியதை தொடர்ந்து ஓசூர் டி.எஸ்.பி. விஜய் கார்த்திக் ராஜா, தாசில்தார் பண்டரிநாதன், பாகலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து மாணவ, மாணவிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    அப்போது டிரைவர் மீதும், கண்டக்டர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. #Tamilnews
    Next Story
    ×