search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் இணைந்து சாதனை படைத்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    X

    சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் இணைந்து சாதனை படைத்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

    ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை, பெங்களூர் இடையேயான போட்டியில் இரு அணிகளும் இணைந்து 33 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்துள்ளன. #VIVOIPL #RoyalChallengersBangalore #ChennaiSuperKings #RCBvCSK

    பெங்களூரு:

    11-வது ஐ.பி.எல். போட்டி யில் பெங்களூர் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது வெற்றியை பெற்றது.

    பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன் குவித்தது.

    டிவில்லியர்ஸ் 30 பந்தில் 68 ரன்னும் (2 பவுண்டரி, 8 சிக்சர்), குயின்டன் டி காக் 37 பந்தில் 53 ரன்னும் (1 பவுண்டரி, 4 சிக்சர்), மன்தீப்சிங் 17 பந்தில் 32 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். ஹர்துல் தாகூர், பிரோவோ, இம்ரான் தாகீர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.



    பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அம்பதி ராயுடு 53 பந்தில் 82 ரன்னும் (3 பவுண்டரி, 8 சிக்சர்), கேப்டன் டோனி 34 பந்தில் 70 ரன்னும் (1 பவுண்டரி, 7 சிக்சர்) எடுத்தனர்.

    இந்த போட்டியில் பெங்களூரு அணி வீரர்கள் 16 சிக்ஸர்களும், சென்னை அணி வீரர்கள் 17 சிக்ஸர்களும் அடித்தனர். மொத்தமாக இரு அணி வீரர்களும் இணைந்து நேற்றைய போட்டியில் 33 சிக்ஸர்களும், 18 பவுண்டரிகளும் அடித்தனர்.

    இதன்மூலம் அதிக சிக்ஸர் அடிக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் நேற்றைய போட்டி முதலிடம் பிடித்துள்ளது. கடந்தாண்டு டெல்லி - குஜராத் இடையேயான ஆட்டத்தில் 31 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதே முந்தைய சாதனையாக இருந்தது. இந்தாண்டு சென்னையின் நடைபெற்ற சென்னை - கொல்கத்தா இடையிலான ஆட்டத்திலும் 31 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #VIVOIPL #RoyalChallengersBangalore #ChennaiSuperKings #RCBvCSK
    Next Story
    ×