search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேட்மிண்டன் ஆசிய சாம்பியன்ஷிப் - சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்த், சாய் பிரனீத், பிரனோய் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
    X

    பேட்மிண்டன் ஆசிய சாம்பியன்ஷிப் - சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்த், சாய் பிரனீத், பிரனோய் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

    சீனாவின் வூஹான் நகரில் நடைபெற்றுவரும் பேட்மிண்டன் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்த், சாய் பிரனீத், பிரனோய் ஆகியோர் இரண்டாது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். #BAC2018 #PVSindhu #SainaNehwal #KidambiSrikanth #SaiPraneeth #HSPrannoy

    பீஜிங்:

    பேட்மிண்டன் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவின் வூஹான் நகரில் நேற்று தொடங்கின. 29-ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் இந்தியா சார்பில் பிவி சிந்து, சாய்னா நேவால், கிடாம்பி ஸ்ரீகாந்த், சாய் பிரனீத், எச்எஸ் பிரனோய் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய  வீராங்கனை சாய்னா நேவால், சிங்கப்பூரின் ஜியா மின் இயோவை எதிர்கொண்டார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய சாய்னா, 21-12, 21-9 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பிவி சிந்து, சீன தைபேவின் யூ போ பாயை எதிர்கொண்டார். இதில் 21-14, 21-19 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற சிந்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.



    இதேபோல் ஆண்கள் பிரிவிலும் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடினர். ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச் எஸ் பிரனோய், தாய்லாந்து வீரர் கண்டபோன் வாங்சரோயெனை 21-15, 19-21, 21-19 என போராடி வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    முன்னதாக நடைபெற்ற மற்றொரு ஆண்கள் முதல் சுற்று ஆட்டத்தில் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஜப்பானின்  கெண்டா நிஷிமோட்டோவுடன் மோதினார். இதில் ஸ்ரீகாந்த் 13-21, 21-16, 21-16 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றார்.

    மற்றொரு ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத், 21-13, 11-21, 21-19 என்ற செட்கணக்கில் தாய்லாந்தின் சுப்பன்யூ அவிஹிக்சனோனை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.  #BAC2018 #PVSindhu #SainaNehwal #KidambiSrikanth #SaiPraneeth #HSPrannoy
    Next Story
    ×