என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிவி சிந்து"

    • ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் குயிங்டாவ் நகரில் நடைபெறுகிறது.
    • பிப்ரவரி 3-ம் தேதி தொடங்கும் இந்தத் தொடர் பிப்ரவரி 8-ம் தேதி வரை நடக்கிறது.

    பீஜிங்:

    ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் குயிங்டாவ் நகரில் நடைபெறுகிறது. பிப்ரவரி 3-ம் தேதி தொடங்கும் இந்தத் தொடர் பிப்ரவரி 8-ம் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

    இந்நிலையில், இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி.சிந்து காயம் காரணமாக ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    கடந்த 2024ம் ஆண்டு நடந்த ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் பி.வி.சிந்து தலைமையிலான இந்திய அணி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து சீனாவின் சென் யூபி உடன் மோதினார்.
    • இந்த ஆட்டத்தில் 21-13, 21-17 என்ற கணக்கில் சிந்து தோல்வியடைந்தார்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் இந்தோனேசியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து சீனாவின் சென் யூபி உடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் 21-13, 21-17 என்ற கணக்கில் சீனா வீராங்கனை சென் யூபி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

    இதேபோல், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென் மற்றும் தாய்லாந்தை சேர்ந்த பக்கபோன் தீரரட்சகுல் ஆகியோர் மோதினர்.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் தீரரட்சகுல் 21-18, 22-20 செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

    • இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் இந்தோனேசியாவில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் பி.வி.சிந்து 2வது சுற்றில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் இந்தோனேசியாவில் நடந்து வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் பிவி சிந்து, டென்மார்க்கின் லைன் ஜேயர்ஸ்பெல்ட் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-19, 21-18 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெற உள்ள காலிறுதியில் பிவி சிந்து சீனாவின் சென் யூபி உடன் மோதுகிறார்.

    இதேபோல், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென் 21-10, 21-11 என்ற செட் கணக்கில் ஹாங்காங் வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    • பி.வி. சிந்து முதல் கேம்-ஐ 22-20 எனக் கைப்பற்றினார்.
    • அதன்பின் 12-21, 15-21 என 2-வது மற்றும் 3-வது கேம்களை இழந்தார்.

    இந்திய ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் தொடர் டெல்லியில் உள்ள இந்திராகாந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி. சிந்து, முதல் சுற்றில் வியட்நாமின் துய் லிங் நகுயென்னை எதிர்கொண்டார். இதில் 68 நிமிடங்கள் போராடி பி.வி. சிந்து தோல்வியை சந்தித்தார். முதல் கேம்-ஐ 22-20 எனக் கைப்பற்றினார். அதன்பின் 2-வது மற்றும் 3-வது கேம்களில் 12-21, 15-21 என தோல்வியை சந்தித்தார்.

    ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் கிடாம்பி, இந்தியாவின் மற்றொரு வீரரான தருண் மன்னேபல்லியை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் கிடாம்பி 15-21, 21-6, 21-19 என வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மாளவிகா பன்சாத் சீன தைபேயின் யு போவை 21-18, 21-19 என வீழ்த்தினார்.

    அதேவேளையில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் 3 ஜோடிகள் முதல் சுற்றிலேயே தோல்வியை சந்தித்தன.

    • பெண்கள் ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் பிவி சிந்து வாங் ஜி யியை எதிர் கொண்டார்.
    • இந்த ஆட்டத்தில் பிவி சிந்து தோல்வியடைந்தார்.

    மலேசிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரும், உலக தரவரிசையில் 18-வது இடத்தில் இருப்பவருமான இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, சிந்து தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள வாங் ஜி யியை (சீனா) மோதினர்.

    இந்த போட்டியில் பிவி சிந்து 16-21, 15-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார். 

    • காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் யமாகுச்சி உடன் மோதினார்.
    • முதல் செட்டை பிவி சிந்து 21-11 என கைப்பற்றினார்.

    மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து நடப்பு உலக சாம்பியனான ஜப்பானின் யமாகுச்சி உடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் முதல் செட்டை பிவி சிந்து 21-11 என கைப்பற்றினார். அடுத்த செட் விளையாடுவதற்கு முன்பு காயம் காரணமாக ஜப்பானின் யமாகுச்சி போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து பிவி சிந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

    • மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    கோலாலம்பூர்:

    மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் டொயோகோ மியாசகி உடன் மோதினார்.

    ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-8, 21-13 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெற உள்ள காலிறுதியில் பி.வி.சிந்து ஜப்பானின் யமாகுச்சி உடன் மோத உள்ளார்.

    • மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    கோலாலம்பூர்:

    மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து, தைவானின் சங் ஷோ யுன் உடன் மோதினார்.

    தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-13, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • சிந்து 2026-ம் ஆண்டு முதல் 2029-ம் ஆண்டு வரை பதவி காலம் வகிப்பார்.
    • BWF கவுன்சிலின் உறுப்பினராகவும் பிவி சிந்து பணியாற்றுவார்.

    இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து. இவர் பேட்மிண்டன் உலக சம்மேளனத்தின் (BWF) விளையாட்டு வீரர்கள் கமிஷனின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 2026-ம் ஆண்டு முதல் 2029-ம் ஆண்டு வரை பதவி காலம் வகிப்பார். மேலும் அவர் BWF கவுன்சிலின் உறுப்பினராகவும், வாக்குரிமை கொண்ட உறுப்பினராகவும் பணியாற்றுவார்.

    டென்மார்க்கின் கேத்ரின் ரோசன்கிரென் அவரது துணைத் தலைவராகப் பணியாற்றுவார். ஆமி பர்னெட் (அமெரிக்கா), குய்லூம் கெயில்லி (பிரான்ஸ்), அபு ஹுபைடா (இந்தியா), மற்றும் தாரெக் அப்பாஸ் கரிப் சஹ்ரி (எகிப்து) ஆகியோர் ஆணையத்தின் மற்ற உறுப்பினர்கள் ஆவர்.

    சிந்து 2017 முதல் இந்த கமிஷனில் உறுப்பினராக பணியாற்றி வருகிறார் மற்றும் 2020 முதல் BWF இன்டெக்ரிட்டி அம்பாசிடராகவும் இருந்து வருகிறார். அவர் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்க வென்றவர் மற்றும் 2019 உலக சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து முழுமையாக குணமடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
    • 2025-ம் ஆண்டின் மீதமுள்ள அனைத்து சுற்றுப்பயண போட்டிகளிலிருந்து சிந்து விலகியுள்ளார்.

    இந்தியாவின் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து. இவர் 2025-ம் ஆண்டின் மீதமுள்ள அனைத்து BWF (Badminton World Federation) சுற்றுப்பயண போட்டிகளிலிருந்தும் விலகியுள்ளார். அவரது காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து முழுமையாக குணமடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

    அவர் ஐரோப்பிய சுற்றுப்பயணத்திற்கு முன்பு காலில் காயம் அடைந்தார். இது முழுமையாக குணமடையாததால், மீதமுள்ள 2025 போட்டிகளிலிருந்து விலக முடிவு செய்தார்.

    இந்த விலகல் 2025 ஆண்டின் இறுதி வரை பொருந்தும், மேலும் அவர் மறுவாழ்வு மற்றும் உடற்தகுதியில் கவனம் செலுத்த உள்ளார். இந்த முடிவு எளிதானது அல்ல, ஆனால் நீண்டகால உடற்தகுதிக்கு அவசியமானது" என்று சிந்து தெரிவித்துள்ளார்.

    • இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் எளிதில் வெற்றி பெற்றார்.
    • இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் எளிதில் வெற்றி பெற்றார்.

    பீஜிங்:

    சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டி வரும் 21-ம் தேதி வரை நடக்கிறது.

    இதில் இந்தியா சார்பில் லக்ஷயா சென், ஆயுஷ் ஷெட்டி, பி.வி.சிந்து, சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி, சிராக் ஷெட்டி உள்ளிட்டோர் களம் காணுகிறார்கள்.

    இந்நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, டென்மார்க் வீராங்கனை ஜூலி டாவால் ஜாகோப்சென் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய பி.வி.சிந்து 21-4, 21-10 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

    இந்தப் போட்டி 27 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

    • ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.

    ஹாங்காங்:

    ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, டானிஷ் வீராங்கனை கிறிஸ்டோபர் சென் உடன் மோதினார்.

    இதில் பி.வி.சிந்து முதல் செட்டை 21-15 என கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்டு அதிரடியாக ஆடிய கிறிஸ்டோபர் சென் அடுத்த இரு செட்களை 21-16, 21-19 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

    ×