search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காமன்வெல்த் விளையாட்டு - பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பரிசுத்தொகை வழங்கினார் முதல்வர்
    X

    காமன்வெல்த் விளையாட்டு - பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பரிசுத்தொகை வழங்கினார் முதல்வர்

    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிசுத்தொகை வழங்கினார். #EdappadiPalaniswami #CommonwealthGames2018
    சென்னை:

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்ததுடன், பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

    மேசைப்பந்து ஆடவர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் சத்தியனுக்கு 50 லட்சம் ரூபாய் உயரிய ஊக்க தொகை அறிவிக்கப்பட்டது.

    மேசைப்பந்து ஆடவர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் மற்றும் ஆடவர் தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் சரத்கமலுக்கு ரூ. 50 லட்சம். ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் சவுரவ் கோ‌ஷலுக்கு ரூ.30 லட்சம்.

    ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் செல்வி ஜோஸ்னா சின்னப்பாவுக்கு 30 லட்சம் ரூபாய், ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் மற்றும் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் தீபிகா கார்த்திக்குக்கு ரூ.60 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி பதக்கம் வென்ற வீரர்களுக்கு இன்று பரிசுத் தொகை வழங்கப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், வீரர்களுக்கான பரிசுத் தொகையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி வாழ்த்தினார். #EdappadiPalaniswami #CommonwealthGames2018
    Next Story
    ×