search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பயிற்சியாளராக ஹீத் ஸ்ட்ரீக் நியமனம்
    X

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பயிற்சியாளராக ஹீத் ஸ்ட்ரீக் நியமனம்

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக ஹீத் ஸ்ட்ரீக் நியமிக்கப்பட்டுள்ளார். #IPL2018 #KKR
    ஐபிஎல் தொடரில் விளையாடும் முக்கியமான அணிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஒன்று. இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள கொல்கத்தா அணியின் ஆலோசகராக கல்லீஸ் உள்ளார். ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சைமன் காடிச் பயிற்சியாளராக நியமிக்கட்டிருந்தார்.

    இந்நிலையில் ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஹீத் ஸ்ட்ரீக் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஹீத் ஸ்ட்ரீக் 2016 மற்றும் 2017 சீசனில் குஜராத் லயன்ஸ் அணியின் பந்து வீச்சாளராக பணியாற்றியுள்ளார்.



    கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்ட காம்பீரை விடுவித்துள்ளது. தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியின் முன்னணி வீரர்களாக அந்த்ரே ரஸல், கிறிஸ் லின் ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்கள். முன்னணி சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் பந்து வீச்சு பிரச்சினையில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×