search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    12 தொகுதிகள் கேட்டு தேவகவுடா பிடிவாதம் பிடிப்பதால் காங்கிரஸ் அதிர்ச்சி
    X

    12 தொகுதிகள் கேட்டு தேவகவுடா பிடிவாதம் பிடிப்பதால் காங்கிரஸ் அதிர்ச்சி

    பாராளுமன்ற தேர்தலில் ஜே.டி.எஸ்.- காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டு உள்ளது. தங்களுக்கு 12 தொகுதிகள் கேட்டு தேவகவுடா பிடிவாதம் பிடிப்பதால் காங்கிரஸ் அதிர்ச்சி அடைந்துள்ளது. #devegowda #parliamentelection #rahulgandhi
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும் பான்மை கிடைக்கவில்லை. இதனால் பா.ஜனதா ஆட்சிக்கு வருவதை தடுக்கும் நோக்கத்தில் ஜே.டி.எஸ். கட்சிக்கு ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது.

    முதல் மந்திரியாக குமாரசாமியும், துணை முதல் மந்திரியாக காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வரரும் இருந்து வருகிறார்கள். 2 கட்சிகளையும் சேர்ந்தவர்கள் மந்திரிகளாக உள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலிலும் ஜே.டி.எஸ்.- காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டு உள்ளனர். தங்களுக்கு 12 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று காங்கிரசிடம் ஜே.டி.எஸ். கட்சி தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா வலியுறுத்தி வருகிறார்.

    இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட முடிவு செய்து உள்ளோம். கர்நாடகாவில் மொத்தம் 28 எம்.பி. தொகுதிகள் உள்ளன. இதில் 12 தொகுதிகளை ஜே.டி.எஸ். கட்சிக்கு கண்டிப்பாக ஒதுக்க வேண்டும் என்று அந்த கட்சி தலைவர்களிடம் வலியுறுத்தி உள்ளேன்.

    விரைவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து இது குறித்து பேசுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜே.டி.எஸ். கட்சிக்கு 5 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க வேண்டும் என்று பாராளுமன்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக கூட்டணி அரசின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல் மந்திரியுமான சித்தராமையா ஆகியோர் காங்கிரஸ் தலைமையில் வலியுறுத்தி உள்ளனர்.

    12 தொகுதிகளை ஜே.டி.எஸ். கேட்டு உள்ளதால் காங்கிரஸ் அதிர்ச்சி அடைந்து உள்ளது. ராகுல்காந்தியை, தேவகவுடா சந்திக்கும் போதுதான் ஜே.டி.எஸ். கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது தெரியவரும். #devegowda #parliamentelection #rahulgandhi
    Next Story
    ×